ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லியில் நிலவும் மின் பற்றாக்குறை குறித்து பேச, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
டெல்லியில் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினை தற்போது அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருவதால், மின் நெருக்கடியைக் குறைக்க அந்த துறை அதிகாரிகளுடன் ஆளுநர் நஜீப் ஜங் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மின் பற்றாக்குறை குறித்து ஆலோசிக்க, ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு, ஆம் ஆத்மி கட்சி சார்பில் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பபட்டுள்ளதாக தெரிகிறது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி