இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் காலமானார் – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் மரணம் அடைந்தார்.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார்.

1969ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் ஸ்ரீநிவாசன். இவரது தந்தை சத்யநாராயணன் மாண்டலின் இசைக் கலைஞராவார். அவரிடம் இசைக் கருவியை இசைக்கக் கற்று மிக சிறந்த கலைஞராக விளங்கினார்.

இவரது சகோதரர் மாண்டலின்  ராஜேஷும் சிறந்த இசைக் கலைஞராவார்.

மாண்டலின் வாத்தியக் கருவியை இசைப்பதில்  நிபுணத்துவம் பெற்று விளங்கிய ஸ்ரீநிவாசன், பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா, சங்கீத பால பாஸ்கரா, தேசிய குடிமகனுக்கான விருது, ராஜீவ் காந்தி தேசிய விருது என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

தமிழக அரசினால் ஆஸ்தான வித்வான் என்ற பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

 பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

மேண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், மேண்டலின் ஸ்ரீனிவாஸின் அர்ப்பணிப்பு மற்றும் இசை உலகுக்கு அவர் அளித்த நெடிய சேவைக்காக அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்று கூறியுள்ளார்.

 

ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்

மேண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

மேண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவு குறித்த செய்தியைக் கேட்டதும் தாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும், அவரது மறுமை உலகம் மகிழ்ச்சியுடன் இருக்க கடவுள் அருளட்டும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், பாடகி சுசித்ரா, நடிகர் சித்தார்த் உள்ளிட்டோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

 

Check Also

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ வேண்டும்: சுஷ்மா சுவராஜ்

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர இடம் கிடைக்கும் வகையில் அந்த அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *