முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, உடனடியாக அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு வி்ட்டதால், தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோரை ஆளுநர் அவசரமாக அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஆளுநர் மாளிகைக்கு விரைந்து சென்று ஆளுநருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு குறித்தும், தமிழகத்தில் அதிமுகவினர் மேற்கொண்டு வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் ஆளுநர் கேட்டுள்ளார் எனத் தெரிகிறது.
Chennai: Tamil Nadu Chief Secretary & Tamil Nadu DGP at the Governor House pic.twitter.com/aRu4vPQWhB
— ANI (@ANI_news) September 27, 2014