இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பீஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்து பண்டிகையான தசரா தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து பெரிய விழா ஒன்றில் கலந்து கொள்ள பொதுமக்கள் திரண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.
பாட்னாவின் காந்தி மைதானத்தில் நேற்று தசரா விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 32 பேர் உயிரி ழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிஹார் உள்துறை செயலாளர் அமீர் சோஹானி கூறியபோது, தசரா கொண்டாட்டங்கள் முடிந்து மக்கள் வீடு திரும்பி கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்ன காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
சம்பவ பகுதியில் போலீஸாரும் மீட்புப் படையினரும் முகாமிட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருகின்றனர். அந்தப் பகுதி முழு வதும் காலணிகளும் மக்களின் உடைமைகளும் சிதறி கிடப்ப தால் போர்க்களம்போல் காட்சி யளிக்கிறது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.