உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில், உள்ள 289 கணக்குகளில் பணம் இல்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் அந்த கணக்குகள் அனைத்தும் நிலுவையில் இருப்பதாக சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள பட்டியலில் 122 பேரின் பெயர்கள் மீண்டும், மீண்டும் பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்து.
குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மிகப்பெரிய தடை இருப்பதையும் சிறப்புப் புலனாய்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. கணக்குகளின் செயல்பாடுகள் குறித்த விபரங்கள் இல்லை என்றும், கணக்கு தொடக்கம் மற்றும் பரிவர்த்தனை குறித்த தகவல்கள் இல்லை என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி