இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனுவிற்கும், சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளரான பெங்களூருவைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயான் இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் தற்போது ராடன் டிவியின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
ரேயான் அபிமன்யூ, மிதுன் திருமண நிச்சயதார்த்தம் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி