239 பயணிகளோடு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணிக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது.
14 நாடுகளை சேர்ந்த பயணிகளுடன் பயணித்த இந்த போயிங் 777-200 இஆர் ரகத்தை சேர்ந்த விமானம், வியாட்நாம் நாட்டின் தெற்கு பகுதியில் பயணப் பாதையில் இருந்து திடிரென காணாமல் போனது.
திடீரென மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் பன்னாட்டு குழுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் சூழலில், விமானம் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவகள் எதுவும் இன்னமும் வெளிவராததால் பயணமாகிய பயணிகளின் உறவினர்கள் தொடர்ந்து பதட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பயணிகளின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதருடன் தான் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அனைத்து உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும், தேவையான தகவகள் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.