தமிழ் மொழி காத்திட வேண்டும். தமிழக அரசு வேலைகளில் தமிழருக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி பாரத மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு. மு. முரளி அவர்கள் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசினார்.
கஜினி முகமதுவின் உருது மொழியிடம் இரவல் வாங்கி, 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகிய இந்தியை நம் தேசத்தின் ஆட்சி மொழியாக்க வேண்டும். இது அவமானமில்லையா?
மத்திய அரசு, மாநில மொழிக்கூட இல்லாத சமஸ்கிருதத்திற்கு ஏன் அக்கறை காட்டுகிறது. இது யாருடைய, எந்த மக்களது தாய் மொழி என கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு நிர்பந்தம் தான் தமிழக அரசு வேலைகளில் தமிழர்களுக்கு வேலை இல்லாமல் போகிறது. இதனால் பிற மாநிலத்தவர்கள் சுலபமாக நம் அரசு வேலைகளில் நுழைவதை தடுத்திட வேண்டும்.
பராம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை முறைப்படுத்தி, நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் எடுத்து சென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.இதனை ஐக்கிய நாடுகளின் சபையும் எதிர்பார்க்கிறது.
நீதிமன்றமே சித்த மருத்துவம் புறக்கணிப்படுவதேன் என கேள்வி எழுப்பும் போது இதனை அரசு புறந்தள்ளாமல் காத்திட வேண்டும் என கூறினார்.
செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” Ln. B. செல்வம்