ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் அறிக்கைகளும் சுட சுட வந்துக் கொண்டிருக்க, வாக்காளர் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் தேர்தல் கால விழிப்புணர்வு பிரச்சாரம் 25.03.2021 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடை பெற்றது.
IJU பொதுச் செயலாளரும், TUJ மாநில தவைவருமான” சொல்லின் வேந்தர்” திரு D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில், தென்சென்னை மாவட்ட தலைவர் திரு. A. லட்சுமணன் அவர்களது ஏற்பாட்டில், வடபழனி காவல்துறை ஆணையாளர், திரு ராஜசேகர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் கே. ராஜன், டியூஜெ மாநில ஒருங்கிணைப்பாளர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன், மாநில இணை செயலாளர் ” கழுகு” கே. ராஜேந்திரன், மூத்த பத்திரிகையாளர் திரு.S.A.N. வசீகரன், திரைப்பட இயக்குநர் திரு ஜாக்குவார் தங்கம், திரைப்பட நடிகர் திரு மயில்சாமி, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியரும், டியூஜெ வடசென்னை மாவட்ட துணை செயலாளருமான “கிங்மேக்கர்” திரு.Ln B. செல்வம் , மாநில செயற்குழு உறுப்பினர் திரு R. விநாயகமூர்த்தி, மூத்த பத்திரிகையாளர் திரு. M.D. ராமலிங்கம் மற்றும் பத்திரிகையாளர்கள் தோழர்கள் கலந்துக் கொண்டு, “100 சதவிதம் நாம் வாக்களிப்போம்” , ” ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்”, ” நோட்டாவை தவிர்ப்போம்” போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை ஏற்படுத்தினர்.
செய்தியாக்கம், படங்கள் : ” கிங்மேக்கர்” Ln B. செல்வம்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி








