சென்னை இராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் அமைந்துள்ள, காசி விஸ்வநாத சிவபெருமானுக்கு வெகு விமரிசையாக அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஆலய குருக்கள் திரு. ராஜசேகர், திரு. மகேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமி நாளில் நடைபெறுகின்ற அன்னாபிஷேகத்தை கண்டுகளித்து அந்த உணவினை பக்தியுடன் உண்போருக்கு வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படாது என்பது ஐதீகம்.
ஒளிப்பதிவு:
V.கந்தவேல்
செய்தியாக்கம் :
“ஜீனியஸ்” K. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி