சமீபகாலமாக பருவ நிலை மாற்றம் என்பது அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என பர்டூ பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் இருந்ததை விட தற்போது பூமியின் வெப்ப நிலை 1.5 டிகரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில் இது 2 டிகரிக்கு மேல் அதிகரித்தால் மாரடைப்பு ஏற்படும் நிலையினை இந்த வெப்பத்தினால் வர வாய்ப்பு உண்டு. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலக மக்களுக்கு ஆபத்து என்பதை சொன்ன போது யாருமே கவலைப்படுவதில்லை.
முதலில் பூமி வெப்பமடைந்து கொண்டு இருக்கிறது என்று சொன்ன போதும் யாரும் கவலைபாபடவில்லை. இதற்காக கடந்த 2014 என்று ஆங்கிலப்படம் மூலமாக வெப்பத்தால் உலகம் எப்படியெல்லாம் அழியும் என்று காட்டிய பின்னரும் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
ஆக எப்போது உலகம் அழிய ஆரம்பிக்கும் என்பது அதிகரித்து வரும் வெப்பமே நம்மை அழிவை நோக்கி அழைத்து செல்வதை இன்னும் புரிந்துக் கொள்ளாமல், இறுதியில் நாம் எல்லா கடவுள்களையும் கூப்பிட்டு கெஞ்சினாலும், அழுது புலம்பினாலும் பலன் கிடைக்காது. இயற்கையை என்று மக்கள் உதானப்படுத்தினார்களோ அன்றே தன் பணிகளை இயற்கை அன்னை துவக்கிவிட்டாள் என்பதே நிஜம்.
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்