நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல: நடிகர் விஜய்

நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல என்று ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உருக்கமாக பேசினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்,

“இன்றைய நாயகன் அனிருத் தான். மிக அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கும், இயக்குநர் முருகதாஸுக்கும் மிக முக்கியமான படம் ‘கத்தி’. ‘கத்தி’ படம் எடுத்தது சண்டை போடுவதற்காக அல்ல. எல்லா தரப்பு மக்களும் சண்டை சச்சரவுகளை மறந்து சந்தோஷமாக படத்தை ரசிக்க வேண்டும் என்பதற்காக தான்.

எந்த மக்களுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இந்த படத்தை எடுக்கவில்லை. என்னை நான் தியாகி என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஆனால் சத்தியமாக நான் துரோகி கிடையாது. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்ய மாட்டேன். இது தமிழ்நாடு, நான் தமிழன்.

உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் அது தெளிவாகும். ஆனால், வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகி விடும்.” என்று கூறினார்.

Check Also

புது முயற்சி! “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இன்றைய இளம் ரசிகர்களை அதிக அளவில் கொண்டவரும் அவரது ரசிகர்களால் ” தளபதி” என …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *