‘ஐ’-யை முந்திய ‘கத்தி’

அனிருத் இசையில் வெளியாகியுள்ள ‘கத்தி’ திரைப்படத்தின் பாடல்கள், இந்திய அளவில் ஐ-டியூன்ஸ் தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ-டியூன்ஸில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன், ‘கத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள’ பாடல் திருட்டுத்தனமாக வெளியானது. இது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

நேற்று கத்தி திரைப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான சில மணி நேரங்களிலேயே, பாடல்களை முறையாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள உலகளவில் பலர் பயன்படுத்தும் ஐ-டியூன்ஸ் இணையதளத்தில், கத்தி பாடல்கள், இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தன. சில நாட்களுக்கு முன் வெளியான ஏ.ஆர் ரகுமானின் ‘ஐ’ படப் பாடல்கள், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதற்கு முன் அனிருத் இசையமைத்த 5 திரைப்பட பாடல்களுமே ஐ-டியூன்ஸ் தளத்தில், வெளியான அன்று முதலிடத்தை பிடித்தது.

தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடம் பிடித்தற்கு ரசிகர்களுக்கும், கத்தி வாய்ப்பிற்காக ஏ.ஆர். முருகதாஸுக்கும், நடிகர் விஜய்க்கும் தனது ட்விட்டர் பக்கத்தில், அனிருத் நன்றி தெரிவித்துள்ளார்.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *