அமுரா

தமிழகத்தின் வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல, டாடி தான் காரணம்: ஸ்டாலின்

[pullquote]தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல என் டாடிதான் காரணம் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.[/pullquote] புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது, ஜெயலலிதா நேற்று பிரச்சாரத்தின் போது தமிழக வளர்ச்சிக்கு காரணம் இந்த லேடி தான் என்று கூறியிருந்தார். ஜெயலலிதாவின் நேற்றைய கருத்து குறித்து விமர்சித்த ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எனது டாடி தான் காரணம் என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் தாம் கண்டது திமுகவிற்கு …

மேலும் படிக்க

நாட்டின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான் : ஜெயலலிதா

அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – நாட்டின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான் : தென்சென்னை மக்களவைத் தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா. தென்சென்னை மக்களவைத் தொகுதியில் நேற்று, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, கடந்த ஒன்றரை மாதகால, தமது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில், மாற்றுக்கருத்து கொண்டவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கவில்லை என்றும், மத்திய காங்கிரஸ் கூட்டணி …

மேலும் படிக்க

குஜராத்தில் சுமார் 7,000 விவசாயிகள் தற்கொலை – முலாயம்சிங் யாதவ்

குஜராத்தில் சுமார் 7,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மிகவும் விலையுயர்ந்த உரங்கள் விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹார்டோய் பகுதியில் பரப்புரை செய்த அவர், பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான மூன்றாவது அணிதான் ஆட்சி அமைக்கும் என்றும் முலாயம்சிங் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் முஸ்லீம், கிறிஸ்டியன் போன்ற …

மேலும் படிக்க

ஐ.பி.எல் – டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி

ஐ.பி.எல் 2014 சீசன் 7ன் 8வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணி 15.4 ஓவர்களில் …

மேலும் படிக்க

கோச்சடையான் வெளியாவதில் சிக்கல்?

கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர், இவரின் சில படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 35 கோடி திருப்பி தந்தால்தான்  கோச்சடையானை வெளியிட முடியும் என தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் அறிவித்துவிட்டார்கள். சில தினங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில், தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் விதித்த கெடுவுக்குள் பாதி பணத்தை, முரளி மனோகர் இன்னும் கட்டாததால் பிரச்சனை ஓயவில்லை, நாளைக்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே கோச்சடையான் வரும் மே …

மேலும் படிக்க

நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடனின் தேர்தல் கருத்துக் கணிப்பு

ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் கருத்துக் கனிப்பு: அதிமுக -15,  திமுக அணி- 14, பா.ஜ.க. அணி 10  திமுக  வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 12 தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள்வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் சிதம்பரம் புதிய தமிழகம்வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் தென்காசி அதிமுக  வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், …

மேலும் படிக்க

பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடாதீர்கள்: பாஜக மூத்த தலைவர்களக்கு மோடி வேண்டுகோள்

பாரதீய ஜனதா தலைவர் கிரிராஜ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்ட கருத்துக்கள் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாரதீய ஜனதா நலம் விரும்பிகள் என்று கூறி தேவையில்லாத பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் இது போன்ற கருத்துகளை வெளியிடுவதை …

மேலும் படிக்க

தேர்தலை பொதுமக்கள் நேரடியாக இணையதளம் மூலம் பார்க்க முதல் முறையாக ஏற்பாடு

வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் பார்க்க முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 39 மக்களவை, ஆலந்தூர் சட்டப்பேரவை   உள்ளிட்ட தொகுதிகளில் மொத்தம் 60,817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 60,817 வாக்குச் சாவடிகளில் 17,684  சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள குறிப்பிட்ட சாவடிகளை இணையதளம் மூலம் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாளான …

மேலும் படிக்க

தமிழகத்தில் முதன்முறையாக தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு

தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்காமல் மக்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரவீண்குமார் பேசியதாவது, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று(22-04-2014) மாலை 6 மணி முதல் 24-04-2014 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை …

மேலும் படிக்க

குஜராத்தில் பதற்றம்-முஸ்லீம் தொழிலதிபர் வாங்கிய வீட்டை காலி செய்ய விஹெஸ்பி தலைவர் தொகாடியா 48 மணி நேரம் கெடு:

குஜராத் மாநிலத்தில் பாவ்நகரில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வீட்டை முஸ்லிம்கள் வாங்க விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் தொகாடியா தடை விதித்துள்ளதுடன் முஸ்லிம்கள் வீட்டை காலி செய்யவும் கெடு விதித்திருப்பது அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகானி சர்க்கிள் என்ற பகுதியில் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார். ஆனால் முஸ்லிம்கள் இப்படி சொத்துகள் வாங்குவதை ஹிந்து தீவிரவாத அமைப்புகளான ராம் …

மேலும் படிக்க