அமுரா

வேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

வேதாளம் டீசர் நேற்று நள்ளிரவில் யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. டீசர் நன்றாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது வரை யூடியுப்பில் பல சாதனைகளை புரிந்து வருகிறது.

மேலும் படிக்க

லாரி வேலைநிறுத்தம் வாபஸ்:பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்ததையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், சுங்கச்சாவடிகள் மற்றும சுங்கக் கட்டணங்களை முறைப்படுத்துவது …

மேலும் படிக்க

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், கடந்த 24–ந் தேதி பக்ரீத் பண்டிகையின்போது லட்சக்கணக்கானோர் கூடி, மினா நகரில் சாத்தான் சுவர் மீது கல்வீசினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 750க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த …

மேலும் படிக்க

சென்னை மாநகராட்சி 86 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பட்டப்பகலில் படுகொலை

சென்னை மாநகராட்சி 86 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திரு. எம். குரு. அவர் இன்று மதியம் 1 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே மர்ம‌ நபர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை.  சென்னை, மன்னூர்பேட்டை, லொகையா நாயுடு தெரு, நம்பர். 15 ல் வசிப்பவர் எம். குரு. அதிமுக வை சேர்ந்த இவர் அந்தப்பகுதியின் (86 வது வார்டு) கவுன்சிலராகவும் உள்ளார். இவர் இன்று மதியம் 1மணியளவில் தனது …

மேலும் படிக்க

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 220 பேர் பலியானதாகவும், 450 பேர் …

மேலும் படிக்க

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை நிகழ்வு

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வந்த ஆண்டாள் மாலையை சூடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பதி பிரம்மோத்ஸவத்தை ஒட்டி, “சூடிகொடுத்த சுடர் கொடி’ என்று பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை கருட சேவையின்போது, மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி, கடந்த 17-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பப்பட்ட மலர் மாலை, மலர் ஜடை, மலர் கிளிகள், பட்டுவஸ்திரம் உள்ளிட்டவை திருமலைக்கு சனிக்கிழமை …

மேலும் படிக்க

மதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா? சிவகார்த்திகேயன் விளக்கம்

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஆகியோர் கலந்துகொண்டார்கள். மதுரைக்கு வருகிறபோது கமலும் சிவகார்த்திகேயனும் ஒரே விமானத்தில் வந்தார்கள். மதுரை விமான நிலையத்திலிருந்து சிவகார்த்திகேயன் வெளியே வந்தபோது கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள். ரஜினிமுருகன் படத்தில் நடித்ததற்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கோஷம் எழுப்பியவாறு சிவகார்த்திகேயனை முற்றுகையிட்டதால் பரபரப்பு …

மேலும் படிக்க

சூரிய ஒளி மின் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

நடப்பாண்டு இறுதிக்குள் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழும் என மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தி ஆராய்ச்சி மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என தென்காசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சரத்குமார் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேலும் கூறியதாவது:- சூரிய ஒளி மின்சக்தியை நவீன முறையில் செயல்படுத்த …

மேலும் படிக்க

சென்னையில் நேற்றிரவு கன மழை

சென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

மேலும் படிக்க

நேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் அமல், புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: நேபாளத்தில் வன்முறை

நேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் இன்று முதல் அமலுக்கு வந்தது 240 ஆண்டுகளாக, மன்னராட்சி நடைமுறை அமலில் இருந்த நேபாளத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு, மன்னராட்சி அகற்றப்பட்டு, மக்களாட்சி நடந்து வருகிறது. இதையடுத்து, மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டது. கடந்த 13-ந்தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சாசனத்தின் ஒவ்வொரு  பிரிவாக விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கை தொடங்கியது. …

மேலும் படிக்க