அமுரா

செய்தியாளர்களுக்கு பாராட்டு: பிரதமர் மோடி

தூய்மை இந்தியா திட்டத்துக்கு சிறப்பான விழிப்புணர்வு கொடுத்துள்ளதாக செய்தியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தீபாவளிப் பண்டிகையை அடுத்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு தேநீர் விருந்தளித்தார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் பேசிய மோடி, பத்திரிக்கையாளர்களுடன் உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊடகங்களில் இருந்தும் தாம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் பத்திரிக்கையாளர் …

மேலும் படிக்க

ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்து விட்டு பொறியியல் மாணவர் தற்கொலை

மதுரை தெற்குமாசி வீதி மஞ்சனக்காரத் தெருவைச் சேர்ந்தவர் அபுதாகிர். தகரப் பட்டறை கூலித்தொழிலாளி. இவரது மகன் ஷேக்முகமது (18). பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.இ. தகவல் தொழில்நுட்பம் படித்து வந்தார். சக மாணவர்களிடமும், வீட்டருகே உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகும் குணமுடைய இவர், தீபாவளியன்று அதிகாலை 2.10 மணிக்கு தனது பேஸ்புக் முகவரியில் ‘ஸ்வீட் எடு.. கொண்டாடு’ என குறிப்பிட்டு நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து அனுப்பியுள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று ஷேக்முகமது …

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 1.1.2015-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் …

மேலும் படிக்க

எபோலா மருந்து கண்டுபிடிக்க ஐரோப்பிய யூனியன் ரூ.200 கோடி ஒதுக்கீடு!

மேற்கு ஆப்பிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸ் சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த நோய் நுழையாமல் தடுக்க அனைத்து நாடுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இந்த நோயை குணப்படுத்த அதிகார பூர்வமான மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே, மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன. அமெரிக்காவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த நோய் பரவி விட்டது. எனவே அதை தடுக்கும் நடவடிக்கையில் இரு நாடுகளும் …

மேலும் படிக்க

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க சில ஆலோசனைகள்!

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சில ஆலோசனைகள்: *எப்பொழுதுமே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவினைப் பொறுத்தே அமைகின்றது. என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதனை நீங்கள் அறிந்தால் மிக ஆரோக்கியமான வாழ்க்கை உங்கள் கையில்தான். உங்கள் குடும்பத்தில் தாய், தந்தையருக்கு சர்க்கரை நோய் தாக்குதல் இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தாலோ நீங்கள் `டயட்’ முறையினை பின்பற்ற வேண்டும். *நல்ல நார்ச்சத்து, கொழுப்பில்லாத பால், மோர், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள், …

மேலும் படிக்க

ரஜினிக்கு சல்மான் கான் சவால்!

இந்திய பிரதமர் மோடி துவங்கி வைத்த ’தூய்மையான இந்தியா’ போட்டி நாடெங்கும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு போட்டியாளர் குப்பைகள் நிறைந்த பகுதியை சுத்தப்படுத்திவிட்டு, அடுத்த நபரை போட்டிக்கு அழைத்து சவால் விடவேண்டும் என்பது போட்டியின் விதிமுறையாகும். இதன் அடிப்படையில் நரேந்திர மோடி, சல்மான் கான் உள்ளிட்ட பலரையும் போட்டிக்கு அழைத்தார். போட்டியை ஏற்றுக்கொண்ட சல்மான் கான் குப்பையாக கிடந்த பகுதிகளை சுத்தம் செய்து, சில வீடுகளுக்கு வெள்ளையும் அடித்தார். தற்போது …

மேலும் படிக்க

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு, 1.11.2014 முதல் அமல்: தமிழக அரசு

ஆவின் நிறுவனத்தின் சமன்படுத்திய பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியின் போது, ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்து கூட பணம் அளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், தனது கொள்முதலையே குறைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு ஆவின் நிறுவனம் தள்ளப்பட்டது. …

மேலும் படிக்க

ஸ்வீடனின் அமெரிக்க தூதர் அமெரிக்க இந்தியர் அஜிதா ராஜி

ஸ்வீடனின் தூதராக அமெரிக்க இந்தியர் அஜிதா ராஜியை பரிந்துரைத்தார் ஒபாமா. தான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, மிகப் பெரும் அளவில் தேர்தல் நிதி சேகரித்துக்கொடுத்த அமெரிக்க இந்தியரான அஜிதா ராஜியை ஸ்வீடன் நாட்டுக்கான அமெரிக்க தூதராக அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த அஜிதா ராஜி, 2012 அதிபர் தேர்தலின் போது, ஒபாமாவுக்காக 5 லட்சம் டாலர் அளவுக்கு நிதி சேகரித்துக் கொடுத்தவர்.

மேலும் படிக்க

இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்

இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் அமைப்பு அபராதம் விதித்துள்ளது. மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர சம்பளம் தொடர்பான அமெரிக்க சட்டங்களை ‘தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக’ …

மேலும் படிக்க