அமுரா

இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் காலமானார் – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் மரணம் அடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் ஸ்ரீநிவாசன். இவரது தந்தை சத்யநாராயணன் மாண்டலின் இசைக் கலைஞராவார். அவரிடம் இசைக் கருவியை …

மேலும் படிக்க

நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

நவதிருப்பதி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள 9 முக்கிய இந்து வைணவதலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயராகும். இந்த ஒன்பது தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாக விளங்குகின்றன. இவை திவ்ய தேசங்களாகவும் உள்ளன. நவக்கிரகங்கள் பொதுவாக இந்து சைவ வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பன. நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாகக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. சோழநாட்டில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. …

மேலும் படிக்க

வருமான வரி வழக்கு: அக். 1ல் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்:எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா ஆகியோர் அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 -ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா, மற்றும் சசிகலா மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பல ஆண்டுகளாக நடைபெறும் இவ்வழக்கில் …

மேலும் படிக்க

சகாயம் தலைமையிலான குழுவிற்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

கிரானைட், மணல் குவாரி முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் தமைமையிலான குழுவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சகாயம் குழுவினரின் விசாரணைக்கு தமிழக அரசு உதவி செய்யும் என  உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக …

மேலும் படிக்க

இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்ககூடாது: முதல் அமைச்சர் ஜெயலலிதா

ஆங்கிலத்தைப் போல் இந்தியையும் முதன்மைப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு, தமிழக பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்று தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை …

மேலும் படிக்க

அர்ஜுனா விருது : இது நம்ம ஊரு விளையாட்டு அரசியல்

இந்தியாவில் விளையாட்டுத்துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கான தேர்வு தொடர்ந்து சர்ச்சையை எழுப்பும் விஷயமாகவே உள்ளது. இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்றிருந்த மனோஜ் குமார் அந்த விருதுக்கு தேர்தெடுக்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றம் சென்றார். அவருக்கு அந்த விருதை வழங்குமாறு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது இந்திய விளையாட்டு அமைச்சகம் மனோஜ் குமாருக்கு, அர்ஜுனா விருது வழங்கப்படும் என்று …

மேலும் படிக்க

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 300-க்கும் அதிகமான பகுதிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவை வீடியோ மூலம் பதிவு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.   வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் …

மேலும் படிக்க

ஸ்காட்லாந்து சுதந்திரம்: வாக்கெடுப்பு தொடங்கியது

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனி நாடாக பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை இணைத்து 1707-ல் பிரிட்டன் நாடு அமைக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த 1922ல் அயர்லாந்து பிரிந்து, தனி நாடானது. அதேபோன்று, ஸ்காட்லாந்தையும் தனி நாடாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கெடுப்பு நடத்த ஒப்புதல் …

மேலும் படிக்க

ஆபாசப் படம் பார்க்க வைத்ததாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் நித்யானந்தா

கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி நித்யானந்தாவுக்கு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கு நித்யானந்தா சரியாக‌ ஒத்துழைக்கவில்லை. ஆதலால் ஆண்மை பரிசோதனை முழுமையாக நடத்தவில்லை. நீதிமன்றத்தை …

மேலும் படிக்க