அமுரா

இலங்கையில் பயங்கர நிலச்சரிவு: 8 உடல்கள் மீட்பு, 300 பேர் வரை சிக்கியிருக்கலாம்?

இலங்கையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டக் குடியிருப்பு பகுதியொன்றில் இன்று காலை ஏற்பட்ட நிலச் சரிவின் போது 300க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என உறவினர்களினால் அஞ்சப்படுகின்றது. சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்புகளில் ஏற்பட்டுள்ள இந்த மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்பதற்கான மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீட்பு குழுவினரால் இன்று நண்பகல் வரை 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டாரவளை பிரதேசத்திலுள்ள கொஸ்லந்த பகுதியில் மீரியாபெத்த ஆற்று …

மேலும் படிக்க

தாய்க்கு கோயில் கட்டும் நடிகர் ராகவா லாரன்ஸ்

நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியவர் ராகவா லாரன்ஸ். தற்போது ‘முனி 3 – கங்கா’ படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் லாரன்ஸ் தனது தாய்க்கு கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். லாரன்ஸின் பிறந்த நாளான இன்று …

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையஉதவி இயக்குநர் ராஜேந்திரன் சென்னையில் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி சற்றே நகர்ந்துள்ளது. எனவே அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

ஆதார் வழங்க தமிழ்நாட்டில் 469 நிரந்தர மையங்கள்

தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்க 469 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்க இணை இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சென்னையில் ஆதார் அட்டை வழங்க 50 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தகவல் தெரிவித்தார். வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் மாநகராட்சிகள், நகராட்சிகள், வட்ட தலைமையகங்களில் ஆதார் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர மையங்கள் அரசு அலுவல் நாட்களில் காலை …

மேலும் படிக்க

NEST-2015 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய அளவிலான கல்வி மற்றும் உதவித்தொகை தேர்வு ( NEST )ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெறுகிறது. இந்த தேர்வு எஸ்.இ.எம்.சி.ஐ ஆண்டுதோறும் நடத்திவருகின்றது. மேற்படிப்பில் சேர்க்கை பெற (CAT, GATE, GRE, TOFEL)போன்ற போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களின் போட்டி திறன்களை மேம்படுத்த NEST -2015 தேர்வு நடத்தப்படுகிறது. NEST -I மற்றும் NEST -II 2015 …

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. கடந்த 24-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப …

மேலும் படிக்க

கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியல் : மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் 627 பேர் கொண்ட பட்டியல் 2 சீலிடப்பட்ட உரைகளில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மூத்த வழக்குரைஞர் முகுல் ரஸ்தோகி தாக்கல் செய்தார். கருப்புப் பணம் பதுக்கியோர் பெயர் …

மேலும் படிக்க

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன்: டில்லி சிபிஐ நீதிமன்றம்

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப டில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு பிரதபலனாக மேக்சிஸ் நிறுவனம் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு ரூ.3,500 கோடி முதலீடு செய்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 2015 மார்ச் 2ம் தேதி நேரில் ஆஜராக டில்லி சிபிஐ …

மேலும் படிக்க

விண்வெளிக்கு பொருட்களுடன் சென்ற ஆளில்லா ராக்கெட் வெடித்துச் சிதறியது: நாஸா

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் சென்ற ஒப்பந்தக்காரர்களுடைய ஆளில்லா ராக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாஸா தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியதாக அது தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு பொருள்கள் கொண்டு செல்லும் பொறுப்பை தனியார் வசம் கொடுத்த பின் நடந்த முதல் நிகழ்வு இந்த விபத்து என்பது கவனிக்கத்தக்கது. செவ்வாய்க்கிழமை நேற்று விர்ஜீனியாவில் …

மேலும் படிக்க

கத்தி படம் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கடம்: டி.எஸ்.ஆர். சுபாஷ்

சமீபத்தில் வெளியாகியுள்ள கத்தி திரைப்படத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களைப்பற்றி விமர்சிப்பது பல பத்திரிகையாளர் தோழர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வெளிவர உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரமணா‘  படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பத்திரிகையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நண்பராக விளங்கினார். அதன்பின் வந்த ‘கஜினி‘ …

மேலும் படிக்க