அமுரா

போர்க்குற்றங்களை மறைக்க கோடிகளை வாரி இரைக்கும் இலங்கை அரசு

இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை மறைக்க இலங்கை அரசு கோடிக்கணக்கில் பணத்தை இறைத்துக் கொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் த இன்டிபெண்டன்ட் ஊடகம் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசு தனது போர்க்குற்றங்களை மறைத்துக் கொள்ளவும், தனது நன்மதிப்பை உயர்த்திக் கொள்ளவும் கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதற்காக எட்டு பொதுமக்கள் …

மேலும் படிக்க

கத்தி படம் இல்லை, பாடம்: நடிகர் விஜய்

கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கத்தி பட வெற்றி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசும்போது விவசாயிகள் படும் துயரம் குறித்து கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், படத்தில் நடிக்கும் போதுதான் இது படம் இல்லை, பாடம் என்பதைத் தெரிந்து கொண்டேன் என்று கூறினார். நிகழ்ச்சியில் இயக்குநர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் …

மேலும் படிக்க

கருப்புப் பண பட்டியலில் சோனியா, ராகுல் பெயர்கள்: சுப்ரமணியசாமி குற்றச்சாட்டு

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் உள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சோனியா, ராகுல் இருவரும் கருப்புப் பணத்தை பதுக்கியிருப்பது குறித்து மத்திய நிதி அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்.  கருப்புபண மீட்புக் குழுவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சோனியா, …

மேலும் படிக்க

சோதனையில் தோல்வியுற்ற ஐரோப்பிய வங்கிகள்

பொருளாதார நிலை மேலும் மோசமடைந்தால், வங்கிகள் அதனை எவ்வாறு தாக்குப் பிடிக்கும் என்பதை மதிப்பிடுவதற்கான சோதனையில், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பலவீனமான பல வங்கிகள் தோல்வி கண்டுள்ளன. 14 வங்கிகள் உடனடியாக பில்லியன் கணக்கான டாலர்கள் புதிய நிதியை தேடுவதுடன், இரு வாரத்துக்குள் தமது பலவீனங்களை திருத்துவதற்கான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இப்படியான 4 பலவீனமான வங்கிகளை கூடுதலாக இத்தாலி கொண்டுள்ளது. கடந்த …

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி கருணாநிதி சார்பில் ஆட்சியரிடம் ஸ்டாலின் மனு

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கருணாநிதி சார்பில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணனிடம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை மனு அளித்தார். திருவாரூரில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், கட்சி சாராதவர்களுடனான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மதிய உணவு இடைவேளையின்போது, மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்றார். அங்கு, ஆட்சியரிடம் கருணாநிதி சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளிக்கிறேன் என்று கூறி மனு …

மேலும் படிக்க

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் 8 பேர் பட்டியல்

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் மேலும் 8 இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த 10 பக்க பிரமாணப் பத்திரத்தில், வெளிநாட்டு வங்கிகளில், டாபர் இந்தியா’வின் நிறுவனர்களில் ஒருவரான பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ …

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் சிவசேனா பாஜகவுக்கு ஆதரவளிக்கிறது: வரும் 31-ல் புதிய அரசு பதவியேற்பு

மகாராஷ்டிர முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யார் என வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா வரும் 31-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முன்வந்துள்ளது. இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் தேவந்திர பட்னாவிஸ் முதல்வராவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மை இல்லை. இதைத் தொடர்ந்து நீண்ட கால …

மேலும் படிக்க

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நியமனம்

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக, சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இப்போது வேளாண்மைத் துறைச் செயலாளராக உள்ளார். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென பிரவீண்குமார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவர் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தீப் சக்சேனா 1989-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் மத்தியப் பிரதேச மாநிலம், போபால். பல்வேறு இடங்களில் பல பொறுப்புகளை …

மேலும் படிக்க

2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சார்பில் அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, தயாளு அம்மாள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமரேந்திர சரண் …

மேலும் படிக்க