அமுரா

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்

பழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வெள்ளியன்று காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் திரையுலகில் பராசக்தி திரைப்படம் மூலம் பிரபலமடைந்த இவர், ரத்தக் கண்ணீர், ரங்கூன் ராதா, சிவகங்கைச் சீமை போன்ற நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். இலட்சிய நடிகர் என்று அவர் பிரபலமாக அறியப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தமிழக அரசியலில் இருந்து செயல்பட்டார். பின்பு அரசியலிருந்து ஓய்வுபெற்ற அவர், …

மேலும் படிக்க

மேற்கு இந்திய தீவுகளுடன் இனிவரும் ஆட்டங்களை நிறுத்த பிசிசிஐ முடிவு

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இந்தியா எதிர்காலத்தில் விளையாடவிருந்த இருதரப்பு கிரிக்கெட் தொடர் போட்டிகள் அனைத்தையும் இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தீர்மானித்துள்ளது. இந்தியாவில் விளையாடிவந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தொடரை பாதியிலேயே ரத்து செய்துவிட்டது சம்பந்தமாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பிசிசிஐ செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானித்துள்ளனர். பார்வையாளர் அரங்க டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், மூன்று …

மேலும் படிக்க

பழனியில் கந்தசஷ்டி விழா துவக்கம்: அக்டோபர் 29 ல் சூரசம்ஹாரம்

பழனி மலைக் கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா வெள்ளிக் கிழமை உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து காப்புக்கட்டுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் புதன்கிழமை சூரசம்ஹாரமும், வியாழக்கிழமை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. பழனியில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி முக்கியமான திருவிழாவாகும். முழுக்க முழுக்க மலைக்கோயிலில் நடைபெறும் இவ்விழா இன்று மலைக்கோயிலில் காப்புக்கட்டுடன் துவங்கியது. அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு  பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.  உச்சிக்காலத்தின் போது மூலவர், …

மேலும் படிக்க

மங்கள்யான் செவ்வாய் கிரகத்தில் நுழைந்து ஒரு மாதம் நிறைவு

இந்திய விண்வெளி ஆராய்சி அமைப்பின் (இஸ்ரோ) சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் விண்கலம்  கடந்த மாதம் செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்க்கிரக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இன்றுடன் ஒருமாத காலம் நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி  மங்கல்யான் விண்கலம் 450 கோடி ரூபாய் செலவில் செவ்வாய் கிரகத்தில், தண்ணீர் மற்றும் கனிம வளங்கள் உள்ளதா? அதன் மேற்பரப்பு எப்படி இருக்கிறது? என்பது குறித்து …

மேலும் படிக்க

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற விரும்புகிறது கர்நாடக அரசு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் வைத்திருப்பதில் பெரும் குடைச்சலில் இருக்கிறது கர்நாடக அரசு. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடகம் விரும்புகிறது. செப்.27ல் ரூ.66.65 கோடி வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக பெங்களூர் சென்ற ஜெயலலிதா, நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அங்கேயே சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் அடைக்கப்பட்ட மத்திய சிறைச்சாலை வளாகத்திலும், சிறைச்சாலையைச் சுற்றிலும் அதிமுக தொண்டர்கள் …

மேலும் படிக்க

ஆர் எஸ் எஸ் தலைவரின் உரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்டதால் சர்ச்சை

இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் என்றழைக்கப்படும் ‘ராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற அமைப்பின் தலைவர் மோகன் பக்வத் இன்று நாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆற்றிய உரை இந்திய அரச தொலைக் காட்சி நிறுவனமான தூர்தர்ஷனால் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இந்துக்களின் நாடு என்ற கோட்பாட்டை முன் நிறுத்தும் அமைப்பு ஆர் எஸ் எஸ். நாட்டையாளும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் …

மேலும் படிக்க

பீஹார் தசரா விழாவில் ஜன நெரிசலில் சிக்கி குறைந்தது 32 பேர் பலி

இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பீஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்து பண்டிகையான தசரா தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து பெரிய விழா ஒன்றில் கலந்து கொள்ள பொதுமக்கள் திரண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. பாட்னாவின் காந்தி மைதானத்தில் நேற்று தசரா விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 32 பேர் உயிரி ழந்தனர். பலர் …

மேலும் படிக்க

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவராத்திரி வாழ்த்து

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள நவராத்திரி வாழ்த்துச் செய்தியில், வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாயும், செல்வத்தைத் தரும் திருமகளாயும், துணிவைத் தரும் மலைமகளாயும் விளங்கும் அன்னையை, பெண்மையை போற்றி வணங்கும் விழா நவராத்திரி திருவிழா. மக்களின் துன்பம் நீக்க எண்ணிய அன்னை ஒன்பது நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள். ஒன்பது நாட்கள் அன்னை சக்தியை வழிபடுவதால் ‘நவராத்திரி’ …

மேலும் படிக்க

அடுத்தது “அம்மா ஜெயிலா” டிவிட்டரில் சுப்ரமணிய சுவாமி

டிவிட்டரில், தமிழக அரசின் அம்மா பெயரில் உள்ள  திட்டங்களை கிண்டலடித்துள்ளார் சுப்ரமணிய சுவாமி இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், அம்மா கேன்டீன், அம்மா சிமென்ட், அடுத்து அம்மா ஜெயிலா? என்று கேட்டுள்ளார். After Amma Canteen Amma Cement will there be Amma Jail? — Subramanian Swamy (@Swamy39) September 29, 2014

மேலும் படிக்க