சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, அவர் ஜாமீனில் வெளிவர முடியாது என்பதால் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைத் தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பதவியில் இருக்கும் முதல்வர் ஒருவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது நாட்டில் இதுவே …
மேலும் படிக்கஜெயலலிதா வீட்டின் அருகே அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி
ஜெயலலிதா வீட்டின் அருகே அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அவரை உடன் இருந்தவர்கள் தடுத்து உயிரை காப்பாற்றியுள்ளனர். Chennai: Self immolation attempt outside Jayalalithaa’s Residence #Jayaverdict pic.twitter.com/wkwuwjx6ZS — ANI (@ANI_news) September 27, 2014
மேலும் படிக்கதமிழகம் முழுவதும் பதட்டம் – அதிமுகவினர் கொந்தளிப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறைப் போராட்டத்தில் குதித்துள்ளனர். Chennai: AIADMK supporters protest outside Subramanian Swamy’s Residence #Jayaverdict pic.twitter.com/BtswiWQJrW — ANI (@ANI_news) September 27, 2014 பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறை வெடித்துள்ளது. சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக …
மேலும் படிக்கதமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொந்தளிப்பு: கருணாநிதி வீட்டின் மீது கல்வீச்சு – ANI News
கருணாநிதி வீட்டின் மீது அதிமுகவினர் கல்வீசியதாக ANI நியுஸ் தெரிவிக்கின்றது. மேலும் ஏராளமான அதிமுகவினர் கருணாநிதியின் வீட்டின் அருகே குவிந்துள்ளனர். அதிரப்படை விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Chennai: #Jayaverdict Stone pelting at Karunanidhi’s residence,Reinforcement arrives pic.twitter.com/u1bavxcVJt — ANI (@ANI_news) September 27, 2014 Chennai: #Jayaverdict AIADMK Supporters gather outside Karunanidhi’s residence pic.twitter.com/lGpZqln1ZR — ANI (@ANI_news) September 27, 2014 Chennai: #Jayaverdict …
மேலும் படிக்கஜெயலலிதா குற்றவாளி என அறிவிப்பு: தண்டனை விவரத்தை 3 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி.
18 வருடமாக நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி பரபரப்பு தீர்ப்பு , வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு. ஜெயலலிதாவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு. இதைத் தொடர்ந்து உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகள் என நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். விரிவான தண்டனை விவரத்தை 3 …
மேலும் படிக்கஅமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி
ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் இரவு தங்கினார். பின்னர், வெள்ளிக்கிழமை காலையில் அங்கிருந்து தனது தனி விமானத்தில் புறப்பட்ட அவர், சுமார் 9 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப் …
மேலும் படிக்ககுஜராத் கலவரம்: மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ள நிலையில், கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக மோடி இருந்த போது முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரம் தொடர்பாக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க நாட்டுக்கு வெளியே நிகழும் சர்வதேச சட்ட மீறல் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க குடிமக்கள் தாக்கல் செய்யும் மனுக்களை விசாரிக்க அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதனடிப்படையில், அமெரிக்க நீதித்துறை …
மேலும் படிக்கமகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் ராஜினாமா
மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாண், வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதையடுத்து, அக்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்ததால் சவாண் பதவி விலகினார். “மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவை வெள்ளிக்கிழமை சந்தித்த பிருத்விராஜ் சவாண், தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்’ என்று உயரதிகாரி ஒருவர் கூறினார். இதையடுத்து, பிருத்விராஜ் சவாணையே இடைக்கால முதல்வராக நீடிக்கச் …
மேலும் படிக்கஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு. பிற்பகல் 1 மணிக்கு வழங்கப்படும்
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு பிற்பகல் 1 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும் உடன் சென்றனர். பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கின் …
மேலும் படிக்கஅமெரிக்கா புறப்பட்டார் மோடி
ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. நியூயார்க் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டில்லியில் இருந்து புறப்பட்டார். அமெரிக்காவில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மோடி, நியூயார்க் நகரில் ஐநாசபை கூட்டத்தில் உரையாற்றுகிறார். மேலும் அந்நாட்டு அதிபர் ஒபாமா, உள்பட பல்வேறு தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்காவிற்கு மோடி முதன் …
மேலும் படிக்க