கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைந்து வருவதால் இந்த ஆண்டு தமிழகத்துடன் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்ள முடியாது என கர்நாடக அமைச்சர் எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பட்டீல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கிருஷ்ணசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டதாகக் கூறினார். கர்நாடகம் கடும் வறட்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், கர்நாடக அணைகளில் உள்ள காவிரிநீரை குடிநீர் தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கர்நாடக …
மேலும் படிக்கபோக்கோ ஹராம் தீவிரவாதிகள் 10 பேருக்கு மரண தண்டனை
போக்கோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகளுக்கு சாத் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. நைஜீரியா, நைஜர், சாத் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் போக்கோ ஹராம் அமைப்பினர் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை அவர்கள் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சாத் நாட்டில் கைது செய்யப்பட்ட போக்கோ ஹராம் தீவிரவாதிகள் பத்து பேருக்கு ஜமினா நீதிமன்றம் மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் …
மேலும் படிக்கஒடிசா அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழப்பு
ஒடிசா மாநில தலைநகர் கட்டாக்கில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில், நேற்று ஒரே நாளில் 7 குழந்தைகள் உயிரிழந்தன. இதன் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த உறவினர்கள், குழந்தைகள் சிகிச்சை மைய வளாகத்தை பூட்டி, நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் போதிய மருத்துவர்கள் இல்லாததே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் என தற்போது …
மேலும் படிக்கரக்சா பந்தனுக்கு பரிசு வெங்காயம்!
வெங்காயத்தின் விலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அத்யாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவராத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வெங்காயத்தை பொதுமக்களுக்கு பரிசளித்து அத்யாவசி பொருட்களின் விலை உயர்வுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் படிக்கவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-6 செயற்கைக் கோள்
ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் வியாழக்கிழமை மாலை சரியாக 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3-வது கிரையோஜெனிக் என்ஜினுடன் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-6 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது. ராக்கெட்டை ஏவுவதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை காலை 11.52 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 2,117 கிலோ எடையுள்ள ஜிசாட்-6 செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றுடன் …
மேலும் படிக்கஸ்மார்ட் நகரங்களின் பட்டியல், தமிழ்நாட்டில் 12 நகரங்கள்
ஸ்மார்ட் நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களின் பெயர் பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு டெல்லியில் இன்று வெளியிட்டார். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் கனவு திட்டங்களில் ஒன்றாக ஸ்மார்ட் நகரம் திட்டம் அமைந்துள்ளது. மொத்தம் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் காஷ்மீரில் அமைய உள்ள ஸ்மார்ட் நகரங்களின் பெயர்களை அறிவிப்பதில் இறுதி முடிவு எடுக்கப்படாததால் 98 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை …
மேலும் படிக்கதிருமாவளவன் மீது முதல்வர் தனிப் பிரிவில் பெண் புகார்
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தன்னை ஏமாற்றி விட்டதாக கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். திருமாவளவன் என்னிடம் பழகிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். டிஜிபி அலுவலகத்தி லும், முதல்வர் தனிப் பிரிவிலும் புகார் அளித்ததால் எனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கோவை போலீஸ் கமிஷனர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கிறார். அவர் மீது நம்பிக்கை இழந்ததால்தான் இந்த புகாரை முதல்வரின் தனிப் பிரிவில் …
மேலும் படிக்கபாயும் புலிக்கு தடை?
லிங்கா பட நஷ்ட ஈட்டை வேந்தர் மூவீஸ் தராவிட்டால், அந்த நிறுவனம் தயாரித்துள்ள பாயும்புலி படத்தை வெளியிடத் தடை விதிக்கப் போவதாக பன்னீர் செல்வம் தலைமையிலான திரையரங்க உரிமையாளர் சங்கம் திடீரென முடிவு செய்துள்ளது. லிங்கா தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. ரஜினியும் தனது அடுத்த பட வேலைகளைத் தொடங்கினார். இந்த சூழலில் லிங்காவின் வெளியீட்டாளரான வேந்தர் …
மேலும் படிக்ககுஜராத்தில் படேல் சமூகத்தினர் போராட்டத்தில் வன்முறை: பலி 9 ஆக அதிகரிப்பு
இட ஒதுக்கீடு கோரி குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது முற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று படேல் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) குஜராத்தில் திடீரென 10 …
மேலும் படிக்கஎன்எல்சி போராட்டம் தற்காலிக வாபஸ்: தொழிற்சங்க நிர்வாகிகள் முடிவு
புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 39 நாட்களாக என்எல்சி தொழிலாளர்கள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. நெய்வேலியில் இன்று (வியாழக்கிழமை) நடந்த என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்புவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தி 24% ஊதிய உயர்வு வழங்க …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி