உலக கோப்பை கால்பந்து: கேமரூனை பந்தாடியது பிரேசில்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் அணி கேமரூன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதல் பாதி ஆட்டம் தொடங்கிய  17வது நிமிடத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மார் தனது அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.

26-வது நிமிடத்தில் கேமரூனின் மேடிப் முதல் கோலை அடித்து கோல் கணக்கை சமன் செய்தார். 35வது நிமிடத்தில் மீண்டும் நெய்மார்  கோல் அடித்து அணியின் கோல் எண்ணிக்கையை 2 ஆக உயர்த்தினார்.  49-வது நிமிடத்தில் பிரேசிலின் பிரெட் 3வது கோல் அடித்தார்.

86-வது நிமிடத்தில் பிரேசிலின் பெர்னான்டின்ஹோ தனது அணிக்கு 4வது கோலை பதிவு செய்தார். இரண்டாவது பாதியில் மேற்கொண்டு கோல் எதுவும் விழாததால் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *