தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் டின் நிறுவனர், மறைந்த தலைவர் டி.எஸ்.ஆர். 2ம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்(டியுஜே) சார்பில், நிறுவனத் தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத் திறப்பு, பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு பத்திரம் ஆகிய நிகழ்ச்சி, 22.6.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை கிண்டி, எம்.ஆர்.சி. ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழநாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில், சிறப்பு விருந்தினராக மேதகு தமிழக ஆளுநர் கே.ரோசைய்யா, மறைந்த தோழர்  டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களது படத்தினை திறந்து வைத்து, மாலை அணிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தலைவர் எஸ்.என்.சின்ஹா, டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, டாக்டர் கமலா செல்வராஜ், முன்னாள் காவல்துறை தலைவர் திருமதி. திலகவதி, ஐ.பி.எஸ்., அகில இந்திய பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் சீனிவாசரெட்டி, ஆந்திர, கேரள, கர்நாடக, பாண்டிச்சேரி பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள், தமிழநாடு யூனியன்
ஆப் ஜர்னலிஸ்ட் மாநில நிர்வாகிகள் டி.வெங்கட்ராமன், கடலூர் ரமேஷ், கொழுமம் தாமோதரன், ஏ.கே.பிரபாகரன், நெல்லை பரமசிவம், ஆர்.கே.முருகன், ராஜேந்திரன், ராதாகிருணன், ராமகிருஷ்ணன், பாண்டிச்சேரி மதிமகராஜா, வழக்கறிஞர் சிவசங்கரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மர்றும் ஜீனியஸ் டிவி சார்பாக ஆசிரியர் திரு. பி.வெங்கடேசன், கௌரவ இணை ஆசிரியர் எல். பரமேஸ்வரன், தலைமை நிர்வாக ஆசிரியர் பி.வி. ஜெயக்குமார், துணை ஆசிரியர் கே. சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியின் முடிவில், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்க ஆலோசகர் டாக்டர் வி.ராமலிங்கம் நன்றி கூறினார்.

Check Also

பத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…

தமிழக பத்திரிகையாளர்களின் வ(வி)ழிக் காட்டியாய் வாழ்ந்து மறைந்தாலும், இன்றும் பத்திரிகையாளர்கள் என்றாலே ஐயா டி.எஸ். ரவீந்திரதாஸ் என ஒவ்வொரு பத்திரிகையாளரும் …

Leave a Reply

Your email address will not be published.