அரசியல்

தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழகம், புதுச்சேரி ஏப்ரல் 24ம் தேதி தேர்தல்

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 9 தேதிகளில் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 16-ந் தேதி ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடப்பு 15வது லோக்சபா பதவிக் காலம் மே-31 ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த லோக்சபா தேர்தலுக்கான தேதியை டெல்லியில் தேர்தல் ஆணையர் சம்பத் இன்று …

மேலும் படிக்க

நரேந்திர மோடி, ராகுல் காந்தி இருவருமே முகேஷ் அம்பானியின் ஏஜென்டுகள்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

நரேந்திர மோடி, ராகுல் காந்தி இருவருமே முகேஷ் அம்பானியின் ஏஜென்டுகள் தான் என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார். நாட்டில் நரேந்திர மோடி அலை ஏதும் வீசவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். மாற்றத்துக்கான அலையும்  கோபமும் மட்டுமே மக்கள் மத்தியில் நிலவுகிறது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

மோடியை ஆண்மையற்றவர்: ராகுல் பேச்சை மீறி குர்ஷித் பிடிவாதம்

டெல்லி: இனி மோடியைக் குறித்துப் பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரை ஆண்மையற்றவர் என்றே குறிப்பிடப் போவதாக அறிவித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ‘2002’ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் …

மேலும் படிக்க

ராகுலை முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை- கணவரே எரித்தார்!

குவஹாத்தி: அஸ்ஸாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த பெண் அவரது கணவரால் தீவைத்து உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுலுக்கு முத்தமிட்டது தொடர்பாக அந்தப் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. அதில் தனது மனைவி மீது தீவைத்து விட்டார் கணவர். அவரும் தீவைத்துக் கொண்டார். இதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்ஸாமின் …

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் உதயகுமார்

இடிந்தகரை – 28-02-2014 கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும் ‘அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக் குழு’ ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், ஆம் ஆத்மி   கட்சியில்  இணைந்தார். இடிந்தகரையில் சுப.உதயகுமார், போராட்டக்குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான மை.பா.ஜேசுராஜ் உள்ளிட்டோர் ஆம் ஆத்மி உறுப்பினர் படிவங்களை நிரப்பி, அக்கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் டேவிட் வருண்குமார் தாமஸிடம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், “ஆம் …

மேலும் படிக்க

தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் நியூஸ் சேனல்கள் மற்றும் மக்களை ஏமாற்றிய நிறுவனங்கள்

டெல்லியைச் சேர்ந்த நியூஸ் எக்ஸ்பிரஸ் இந்தி டிவி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் எதிரொலியாக தற்போது டைம்ஸ் நவ் டிவியும் தனது கருத்துக் கணிப்புகளை நிறுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன. நியூஸ் எக்ஸ்பிரஸ் டிவி கருத்துக் கணிப்புகளை எந்த அளவுக்கு போலியானதாக, மோசடியாக செய்கிறார்கள் என்பதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. அது ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய கருத்துக் கணிப்பு நிறுவனங்களில் ஒன்று சி வோட்டர். இதையடுத்து சிவோட்டர் மூலம் கருத்துக் …

மேலும் படிக்க

திமுக இராயபுரம் பகுதி செயலாளர் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகம் இராயபுரம் பகுதி செயலாளர் கட்பீஸ் அ. பழனி அவர்களின் புதல்வர்      ப. சோமசுந்தர மூர்த்தி –த. வித்யா அவர்களின் திருமணத்தினை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தி வைத்தார். இத்திருமண விழாவில் கழக முன்னோடிகள், தொண்டர்கள், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஆசிரியர் பி. வெங்கடேசன், தமிழக வணிக வரித்துறை உதவி ஆணையர் (ஒய்வு) சு. சேகர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் இணை ஆசிரியர் லயன் லி. …

மேலும் படிக்க

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என நினைப்போர் முட்டாள்கள்: ராம் ஜெத்மலானி

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடியவர் ராம் ஜெத்மலானி. மூன்று தமிழரின் தூக்கு ரத்தானபோது ஜெத்மலானிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ஜெத்மலானி இன்று சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெத்மலானி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று நினைக்கிற …

மேலும் படிக்க

கியாஸ் விலை உயர்வு விவகாரம், நரேந்திர மோடி தனது நிலையை வெளிபடுத்த வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

சர்ச்சைக்குரிய கியாஸ் விலை உயர்வு  விவகாரம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது நிலையை வெளிபடுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக் கிழமை கேட்டுக் கொண்டார். நரேந்திர மோடி ரிலையனஸ் நிறுவனதின் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இவ்விவகாரம் தொடர்பாக …

மேலும் படிக்க

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்வது தவறு; அரவிந்த் கெஜ்ரிவால்

ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு பற்றி டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் “இது நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் இது …

மேலும் படிக்க