அரசியல்

ஒட்டுப்பதிவு நேரத்தை 1 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு?

மக்களவை தேர்தல் 2014 க்கான வாக்குபதிவு நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 12-ம் தேதி வரை 9 தேதிகளில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மொத்தம் 81 கோடியே 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். கடந்த தேர்தலை விட புதிதாக 10 கோடி பேர் வாக்களிக்க இருப்பதால் இந்த முறை வாக்கு …

மேலும் படிக்க

திமுக தேர்தல் அறிக்கை – கச்சத்தீவை மீட்போம்

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கருணாநிதி * சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் * கச்சத்தீவை மீட்போம் * மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நாடு முழுவதும் இடஒதுக்கீடு * நாடு முழுவதும் 10 லட்சம் பெண்கள் மக்கள் நலப் பணியாளர்கள், 10 லட்சம் சாலைப் பணியாளர்கள் நியமனம் * மதநல்லிணக்க வரலாறு படைப்போம், மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் * வேலைவாய்ப்பில் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை * பழங்குடியினப் பட்டியலில் மீனவர்களை …

மேலும் படிக்க

மு.க ஸ்டாலின் மக்களவை தேர்தல் 2014 பிரச்சாரத்தை குமரியில் ஆரம்பிக்கிறார்.

மு.க ஸ்டாலின் மக்களவை தேர்தல் 2014 பிரச்சாரத்தை குமரியில் வரும் 14 ம் தேதி ஆரம்பிக்கிறார். ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள அவரது தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம். நாடாளுமன்றத் தேர்தல் – 2014 தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம். 14-3-2014 – கன்னியாகுமரி 15-3-2014 – திருநெல்வேலி 16-4-2014 – தென்காசி 17-3-2014 – தூத்துக்குடி 18-3-2014 – காஞ்சிபுரம் 20-3-2014 – தஞ்சாவூர் 21-3-2014 – நாகப்பட்டினம் 22-3-2014 …

மேலும் படிக்க

அழகிரி புதிய கட்சி? தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவு.

தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை, பம்மலில் உள்ள  நல்லதம்பியை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றார் மு.க.அழகிரி. உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ள நல்லதம்பியை சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும், புதிய கட்சி தொடங்கவேண்டும் என தொண்டர்கள் ஆர்வம் காட்டினாலும், ஆதரவாளர்களுடன் ஆலோசித்துவிட்டு …

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், சிதம்பரம் பைபாஸ் சாலையில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நாளை பிரச்சாரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு நாளை ஆதரவு திரட்டுகிறார். இதற்காக வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடனும், நாற்பதும் நமதே என்ற வெற்றி முழக்கத்துடனும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் …

மேலும் படிக்க

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 35 திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: நீலகிரி – ஆ.ராசா

சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார். * மத்திய சென்னை – தயாநிதிமாறன் * ஸ்ரீபெரும்புதூர் – ஜெகத்ரட்சகன் * தென் சென்னை – டி.கே.எஸ்.இளங்கோவன் * வட சென்னை – கிரிராஜன் * கள்ளக்குறி்ச்சி – மணிமாறன் * சேலம் – உமாராணி * நாமக்கல் – …

மேலும் படிக்க

ஆம் ஆத்மியின் தமிழக தலைவர் உதயகுமார்?

ஆம் ஆத்மி கட்சியில் சமீபத்தில் இணைந்த கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை கட்சியின் மாநிலத் தலைவராக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. விரைவில் இடிந்தகரைக்கு வரவுள்ள கெஜ்ரிவாலே இதை நேரடியாக அறிவிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் அரசியல் களத்திற்குப் புகுந்தவர் உதயகுமார் மற்றும் அவர் போராட்டக் குழுவைச் சேர்ந்த மை.பா.ஜேசுராஜ், புஷ்பராயன் ஆகியோரும் ஆம் ஆத்மியில் இணைந்தனர். தமிழகத்தில் இந்தக் கட்சி …

மேலும் படிக்க

கெஜ்ரிவாலுடன் சாப்பிடலாம் ரூபாய் 20,000 மட்டுமே!

கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். முக்கிய நகரங்களுக்கு கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் செல்வதால் ஆம்ஆத்மி கட்சிக்கு நிறைய பணம் செலவாகிறது. இதுவரை சேகரித்த பணத்தில் கணிசமான தொகை செலவாகி விட்டது. அடுத்து முக்கிய வேட்பாளர்களுக்கான செலவை கட்சியே ஏற்க வேண்டியதுள்ளது. தற்போது …

மேலும் படிக்க

ஜெயலலிதா பெண்கள் சமுதாயத்திற்கான சில பாதுகாப்புகளையாவது உறுதி செய்வாரா? ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்  தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது: பெண்கள் பாதுகாப்பிற்கு ஜெயலலிதா அறிவித்த 13 அம்ச திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்? “மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழக காவல்துறை விளங்குகிறது” என்றும் “காவல்துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் சட்டமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் முதலமைச்சர் ஜெயலலிதா பேசிவருகிறார். அப்படி நவீனப்படுத்தப்பட்ட காவல்துறையை வைத்துக்கொண்டு நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் ஆட்சியிலேயே ஏன் …

மேலும் படிக்க

குஜராத்தின் நிலை உண்மையா? கண்டறிய சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் கைது

இந்தியாவில் குஜராத்தை முன்னோடி மாநிலமாக்கியுள்ளதாக அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறி வருகிறார். இந்நிலையில் அவர் கூறுவது எல்லாம் உண்மை தானா என்பதை கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று குஜராத் சென்றார். வடக்கு குஜராத்தில் உள்ள ரதன்பூருக்கு செல்லும் வழியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் ரதன்பூரில் பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லையாம். அனுமதியை …

மேலும் படிக்க