தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், கிரானைட், தாது மணல் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுகிறது, மதுரையை போல் மற்ற மாவட்டங்களிலும் கிரானைட் மற்றும் தாது மணல் …
மேலும் படிக்ககந்து வட்டி வசூலித்தால் குண்டர் சட்டம்?
பொதுமக்களிடம் கந்து வட்டி வசூலிப்போரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்து வட்டி தடுப்புச் சட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரம் செய்யும்படி அரசுக்கு உத்தர விட்டனர். கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், இந்த விவகாரத்தில் கந்து வட்டி …
மேலும் படிக்கநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு: சிபிஐ இயக்குநருக்கு நோட்டீஸ் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சிபிஐ இயக்குநர் ரஞ்ஜித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றச்சாட்டு குறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் மீதான புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும், சிபிஐ இயக்குநர் பதவியில் …
மேலும் படிக்கநித்யானந்தாவிற்கு இன்று ஆண்மை பரிசோதனை
பெங்களூரு அருகேயுள்ள பிடதியில் அமைந்துள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி ராமநகரம் மாவட்ட நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அவரை ஆண்மை பரிசோதனைக்கு இன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும் படிக்கஇத்தாலி கடற்படை வீரர் நேரில் 2 வாரங்கள் ஆஜராக விலக்கு : உச்ச நீதிமன்றம்
இந்திய கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் ஒருவர், இரண்டு வாரங்களுக்கு காவல்துறை முன் ஆஜராக தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களில் ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அவர் இரண்டு வாரங்களுக்கு ஆஜராக விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்கவெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை உத்தரவு
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு விவரம்: பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், …
மேலும் படிக்கஐபிஎல் சூதாட்டம்: முட்கல் குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்பிப்பு
ஐபிஎல் சூதாட்டம் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் என். ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 13 பேர் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் நியமித்திருந்த நீதிபதி முட்கல் தலைமையிலான குழு, தனது விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் இன்று உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட நீதிபதி டி.எஸ்.தாகுர் தலைமையிலான அமர்வு, இது தொடர்பிலான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் …
மேலும் படிக்கசன் குழுமம் கேபிள் டி.வி நடத்த அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சன் குழுமம், சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான உரிமம் வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. இதற்கான தகவலை கடந்த 20ஆம் தேதி வெளியிட்டபோது, அன்றிலிருந்து 15 நாட்களுக்குள் தன் சேவைகளை நிறுத்திக் கொள்ளும்படி சன் குழுமத்துக்கு இந்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கல் கேபிள்ஸ் பிரைவேட் லிமிடேட் (Kal …
மேலும் படிக்கசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ் மொழியை அதிகாரப்பூர்வ வழக்கு மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இன்று திங்கள்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான தருண் விஜய் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இன்று இது தொடர்பாக பிரணாப் முகர்ஜியிடம் அளித்துள்ள மனுவில், இந்த கோரிக்கை ஏற்பது தொடர்பிலான பதிலில், நீதிபதிகள் பல்வேறு …
மேலும் படிக்கதமிழகம் வழியாக கெயில், எரிவாயுக் குழாய் பதிப்பு: நீதிமன்றத் தடை நீட்டிப்பு
தமிழகத்தில் விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிக்கு விதிக்கப்பட்ட தடையை, இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கட்கிழமை மேலும் மூன்று வார காலத்திற்கு நீட்டித்துள்ளது. வேளாண் நிலங்களுக்கு இந்த திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க மூன்று வார காலம் கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி …
மேலும் படிக்க