உலக அளவில் பார்க்கும் போது, இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். குறிப்பாக தென் மாநிலங்களில் தான் அதிக அளவில் தற்கொலைகள் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்கொலைத் தலைநகராக சென்னை மாறி வருகிறது. இளம் வயதினரே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறுகிறார் மனநல மருத்துவர் லட்சுமி. …
மேலும் படிக்கஇந்தியாவுடன் போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு பேரிழப்பு ஏற்படும்: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மிரட்டல்
இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் அண்மையில் பேசுகையில் இந்திய ராணுவம் விரைவான, குறுகிய காலப் போருக்கு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் கடந்த 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் 50ஆவது ஆண்டு தினம், பாகிஸ்தான் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தேசியப் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகம் …
மேலும் படிக்கமகப்பேறு கால விடுமுறை 3 மாதத்திலிருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு
மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பணிபுரியும் பெண்களுக்கு தாய்மை அடையும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு முந்தைய சிக்கலைவிட பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையைக் கூட கவனிக்க முடியாமல் மூன்று மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டியிருக்கிறது. …
மேலும் படிக்க30 பேருக்கு வழங்கப்பட்ட விஜபி பாதுகாப்பு வாபஸ்
நாராயண சாமி உள்ளிட்ட 30 பேருக்கு வழங்கப்பட்ட விஜபி பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக்கொண்டுள்ளது. இந்த பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார், உள்ளிட்டோரும் அடங்குவர். அந்த விஜபிகளுக்கு முன்பிருந்த அச்சுறுத்தல் தற்போதும் நீடிக்கிறதா என்பதை ஆய்வு செய்ததின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்கஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக மாணவர்களை கலையில் ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி என்றும், இளமை பருவத்தில் ஆசிரியர்கள் கற்பித்தது நமது நினைவில் என்றும் இருக்கும் எனவும் கூறினார். ஒவ்வொருவரின் வாழ்க்கையை …
மேலும் படிக்கஇந்தியாவில் 7 புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகள்
கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 7 புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கி அளித்த பரிந்துரையை ஏற்று, இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நோட்டுகளில் 7 புதிய அம்சங்கள் இடம்பெறும் என்றும், முதற்கட்டமாக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் …
மேலும் படிக்கஆந்திராவில் வெங்காய லாரி கடத்தல்
ஆந்திராவின் ராவலுபடு பகுதியில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு ஆந்திராவை நோக்கி லாரி ஒன்று வந்தது. ராவலுபடு என்ற இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சாலையோரம் தூங்கியுள்ளார். அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்காயத்துடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஓட்டுநர் லாரி இல்லாததைக் கண்டு …
மேலும் படிக்கஷாப்பிங் வித் ரவுடி! 6 டெல்லி போலீஸ் பணியிடை நீக்கம்
ரவுடி மனோஜ் பக்கர்வாலாவை டெல்லி போலீசார் கடந்த 27ம் தேதி திகார் சிறையில் இருந்து ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அதன் பிறகு திகார் சிறைக்கு வரும் வழியில் தனக்கு ஷூ வாங்க கடைக்கு அழைத்துச் செல்லுமாறும், அவ்வாறு அழைத்துச் சென்றால் போலீசாருக்கும் ஷூ வாங்கிக் கொடுப்பதாகவும் மனோஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து துணை சப் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மனோஜுடன் ஷாப்பிங் …
மேலும் படிக்ககல்புர்கி கொலை: சந்தேகிக்கும் இருவரின் உருவ படங்கள் வெளியீடு
கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் உருவ படங்களை கர்நாடக போலீசார் வெளியிட்டுள்ளனர். கன்னட எழுத்தாளரான கல்புர்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக மாநிலம் தர்வாத்தில், மர்மநபர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அம்மாநில சிபிசிஐடி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் உருவப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் சிசிடிவியில் …
மேலும் படிக்கமொபைலில் ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்
மொபைலில் மாதாந்திர ரயில் சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் எடுக்கும் வசதி அடுத்த சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். டில்லி பல்வால் புறநகர் ரயில் பிரிவில், செல்போனில் சாதாரண ரயில் டிக்கெட் பெறும் முறையை ரயில்வே துறை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்த சில நாட்களில் சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் மாதாந்திர சீசன் …
மேலும் படிக்க