ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இதன்மூலம், தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குகிறது. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு அறிவித்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் …
மேலும் படிக்கமங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு வட்டத்தை எட்டியது: பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்
இந்தியா அனுப்பியுள்ள ‘மங்கள்யான்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் (ISRO’s Mars Orbiter Mission) என்ற பேஸ்புக் பக்கத்தில் “மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக தெரிவிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.450 கோடியில் உருவாக்கப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி …
மேலும் படிக்கதிருப்பதியில் அஞ்சலகத்தில் ரயில்வே இ-டிக்கெட் சேவை தொடங்க முடிவு!
திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 5 அஞ்சலகங்களில், விரைவில் ரயில்வே இ-டிக்கெட்டுகள் சேவை தொடங்கப்பட உள்ளதாக, திருப்பதி அஞ்சலக அதிகாரி சர்மா தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, அஞ்சலகங்களில் அஞ்சல்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல், பல மக்கள் நலப்பணிகளும் தொடங்கி சிறந்த முறையில் இயங்கி வருகிறது. அதில், திருப்பதி தலைமை அஞ்சலகம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, திருப்பதி, திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி, சந்திரகிரி, ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைகழக வளாகத்தில் உள்ள …
மேலும் படிக்கதமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சுப்ரமணிய சுவாமி ட்விட்டரில் விமர்சனம்
Jail for Jayalalitha. Her to govern is like giving a garland of flowers to a monkey or asking a donkey to appreciate Kalpura incense aroma. — Subramanian Swamy (@Swamy39) September 20, 2014 தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான வகையில் டிவிட் செய்துள்ளார் சுப்ரமணிய சுவாமி. தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும், மீனவர் பிரச்சினை குறித்தும் அவதூறாக …
மேலும் படிக்கடெல்லி திகார் ஜெயிலில் தொடரும் கைதிகளின் மர்ம மரணம்
கடந்த சில வாரங்களில் நடந்துள்ள மர்மமான இறப்புகளை அடுத்து திகார் சிறையில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சிறைத்துறை டி.ஜி.பி. முகேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். டெல்லி திகார் சிறையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் திகார் சிறையில், 4-வது முறையாக மர்மமான முறையில் கைதி இறந்த சம்பவம நடந்துள்ளது. டெல்லியில் உள்ள திகார் …
மேலும் படிக்கஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலியாக இருந்த 530 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 1,486 பேர் போட்டியிட்டனர். உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் …
மேலும் படிக்கவருமான வரி வழக்கு: அக். 1ல் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்:எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா ஆகியோர் அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 -ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா, மற்றும் சசிகலா மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பல ஆண்டுகளாக நடைபெறும் இவ்வழக்கில் …
மேலும் படிக்கசகாயம் தலைமையிலான குழுவிற்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
கிரானைட், மணல் குவாரி முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் தமைமையிலான குழுவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சகாயம் குழுவினரின் விசாரணைக்கு தமிழக அரசு உதவி செய்யும் என உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக …
மேலும் படிக்கஇந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்ககூடாது: முதல் அமைச்சர் ஜெயலலிதா
ஆங்கிலத்தைப் போல் இந்தியையும் முதன்மைப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு, தமிழக பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்று தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை …
மேலும் படிக்கதமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 300-க்கும் அதிகமான பகுதிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவை வீடியோ மூலம் பதிவு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி