டெல்லி திகார் ஜெயிலில் தொடரும் கைதிகளின் மர்ம மரணம்

கடந்த சில வாரங்களில் நடந்துள்ள மர்மமான இறப்புகளை அடுத்து திகார் சிறையில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சிறைத்துறை டி.ஜி.பி. முகேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி திகார் சிறையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் திகார் சிறையில், 4-வது முறையாக மர்மமான முறையில் கைதி இறந்த சம்பவம நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள திகார் சிறையில் வியாழக்கிழமை மாலை சிறை.1-ல் அடைக்கப்பட்டிருந்த ரிங்கு ஜூன்ஜா(27) என்ற கைதி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். ரிங்கு ஜூன்ஜா கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

Check Also

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், …

Leave a Reply

Your email address will not be published.