முக்கியசெய்திகள்

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 220 பேர் பலியானதாகவும், 450 பேர் …

மேலும் படிக்க

சூரிய ஒளி மின் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

நடப்பாண்டு இறுதிக்குள் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழும் என மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தி ஆராய்ச்சி மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என தென்காசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சரத்குமார் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேலும் கூறியதாவது:- சூரிய ஒளி மின்சக்தியை நவீன முறையில் செயல்படுத்த …

மேலும் படிக்க

சென்னையில் நேற்றிரவு கன மழை

சென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

மேலும் படிக்க

அதிமுக ஆட்சியை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்: ஸ்டாலின்

நமக்கு நாமே விடியல் மீட்பு பிரசாரத்தின் 2ம் நாள் பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கினார். சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, “நமக்கு நாமே விடியல் மீட்பு” என்ற பெயரில் தமிழகம் முழுவதும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இதையடுத்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று …

மேலும் படிக்க

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் தீவிர விசாரணை

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை மற்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக பெறபட்ட ஆவணங்களைக்கொண்டு சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி நாமக்கல்லில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அவர் இன்று ஆய்வு நடத்த உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றிய விஷ்ணுபிரியா திருச்செங்கோடு டி.எஸ்.பி முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். காதல் விவகாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பொறியாளர் கோகுல்ராஜ் …

மேலும் படிக்க

ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

விண்ணில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்தவதற்காக தயாரிக்கப்பட்ட ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்ணில் உள்ள கிரகங்கள் பற்றி, ஆஸ்ட்ரோ சாட் செயற்கை கோள் ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோளுடன், இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் 6 செயற்கைக் கோள்களும் சேர்த்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் 28ம் …

மேலும் படிக்க

இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜெயின் சமூகத்தினரின் பர்யூஷன் விரத காலத்தை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று மும்பை மாநகராட்சி தடை விதித்தது. இந்த உத்தரவை நிறுத்தி வைத்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயின் சமூகத்தினர் தாக்கல் …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இந்நன்னாளில் அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ எங்கள் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

மேலும் படிக்க

விநாயகர் சதுர்த்தி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னவே யானை முகத்தவனே என்று மக்களால் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கணபதியைத் துதித்து வழிபட்டால் வினைகள் நீங்கி, கவலைகள் தீரும் என்று முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை தொழுது புதிய …

மேலும் படிக்க

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.  வாக்காளர் விவரங்களை http://www.elections.tn.gov.in/ இந்த இணையதளத்தில் காணலாம்.

மேலும் படிக்க