முக்கியசெய்திகள்

ஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய பெண் அதிபர் ஒரு விபசாரி – வட கொரியா

“ஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய பெண் அதிபர் ஒரு விபசாரி” என வட கொரியா பகிரங்கமாக தாக்கி உள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் தென் கொரியா தலைநகர் சியோலுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் ஷியுன் ஹையை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, “அண்டை நாடான வட கொரியா …

மேலும் படிக்க

சென்னை சேப்பாக்கத்தில் 33 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் வீட்டில் தங்கம் இருப்பதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 33 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் இருந்த தமீம்அன்சாரி, அவரது தம்பி ரகுமான் ஆகியோரிடம் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

மேலும் படிக்க

வெற்றி பெற்றதாக போஸ்டர் வைத்தது தொடர்பாக அதிமுக வேட்பாளர் மீதும் வழக்கு: தேர்தல் ஆணையர் பிரவீண்குமார்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இன்று  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, வெற்றி பெற்றதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர் அடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார். மேலும் காஞ்சிபுரத்தில் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக போஸ்டர் அடித்த விவகாரத்தில் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக நேற்று காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட …

மேலும் படிக்க

1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி – காஞ்சிபுரத்தில் தேர்தல் முடிவு வரும் முன்பே வெற்றி அறிவிப்பு பேனரால் பரபரப்பு

தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத நிலையில், காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அதிமுகவினர் வைத்த வாழ்த்து பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில், வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம் என்று பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழகம் …

மேலும் படிக்க

அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

வாரணாசி: அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலம் தேர்தல் ஆணையத்தால் திடீரென சோதனை செய்யப்பட்டுள்ளது. ‘AAP ki Kranti என்ற பெயர் கொண்ட செய்தித்தாள்கள் 60 லட்சம் பிரதிகளை கேஜ்ரிவால் தனது சிவாஜிநகர், வாரணாசி கட்சி அலுவலகத்தில் பதுக்கி வைத்துள்ளார் என்று பாஜக பிரமுகர் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை அதிரடியாக கேஜ்ரிவால் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியது. ஆனால் அங்கு ஒரு லட்சத்து 92 …

மேலும் படிக்க

மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது? – ஆஸி. கடலாய்வு நிறுவனம்

மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா பகுதியில் விமானத்தின் உடைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கடலாய்வு நிறுவனம் கூறியதாக ஸ்டார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், …

மேலும் படிக்க

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: முத்கல் குழு விசாரணைக்கு பிசிசிஐ எதிர்ப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

ஐ.பி.எல் சூதாட்டப் புகாரை எந்த குழு விசாரிப்பது என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி முத்கல் குழு, ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, ஐபிஎல் போட்டியில் நடைபெற்றதாகக் கூறப்படும் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக விசாரிக்க புதிய குழு அமைப்பது தொடர்பான விசாரணை முடிந்து, …

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயில்: நான்கு மாதங்களில் போக்குவரத்து தொடக்கம்

சென்னை: சென்னை, கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை இரண்டு வழித்தடங்களிலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலும், சென்ட்ரலில் இருந்து தாமஸ் மவுண்ட் வரையயிலும் இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் …

மேலும் படிக்க

டில்லியில் பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து

தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் தென் பிளாக்கில் இன்று காலை திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்தததும் தீ அணைப்பு துறையினர் 6 தீ அணைப்பு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

மேலும் படிக்க

தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் மே1 முதல் உயர்கிறது

[pullquote] சாய்வு வசதி உடைய சொகுசு ஏர் பஸ்சுக்கு ரூ. 20, வோல்வோ பஸ்சுக்கு ரூ. 30, படுக்கை வசதியுடன் கூடிய ஏ.சி. பஸ்சுக்கு ரூ. 50 உயர்த்தப்பட உள்ளது.[/pullquote] சென்னை: தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்களின் கட்டணம் மே 1ம்தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. தற்போது விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ் கட்டணத்தை உயர்த்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் …

மேலும் படிக்க