முக்கியசெய்திகள்

துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

15-04-2014 அன்று துணை வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி வாரியாக ஆண், பெண் வாக்காளர் விவரங்களும் வெளியிடப்படும் என்று கூறினார். மேலும் 19ம் தேதிக்குள் வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

தவறாமல் வாக்களியுங்கள் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை அதனால் தவறாமல் வாக்களியுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். முக்கியமான பல கடமைகளில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. …

மேலும் படிக்க

ரஜினியை மட்டும் சந்தித்ததால் விஜயகாந்த் கோபம்? சமாதானம் செய்தாரா? நரேந்திர மோடி

ரேந்திர மோடி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் வலுசேர்க்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். பின்னர் பேட்டியளித்த ரஜினிகாந்த், மோடியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள் என்றார். நரேந்திர மோடி வலிமையான தலைவர், சிறந்த நிர்வாகி என்றும் கூறினார். இதற்கிடையே ரஜினியை சந்தித்த நரேந்திர மோடி, தமிழக பாஜ கூட்டணியில் அதிக வாக்கு …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் – ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் முதல் தேடலில் எந்த தகவலும் இல்லை

இந்துமகா சமுத்திரத்தில் தனது முதல் தேடல் நடவடிக்கையின் போது, சிறிய ஆளில்லா நீர்மூழ்கியால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்த எந்த விதமான தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அமெரிக்க கடற்படையின் காப்டன் ஒருவர்  கூறியுள்ளார். தானாகவே இயங்கக் கூடிய அந்த ரோபோ நீர்மூழ்கி, தான் அதிகபட்சம் செல்லக் கூடிய ஆழத்துக்கு செல்வதற்கு முன்னதாக, கடலின் அடித்தளம் குறித்து பல மணிநேரம் தகவல்களை சேகரிக்கக் கூடியதாக இருந்தது. அதன் பின்னர் அது நீரின் …

மேலும் படிக்க

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநங்கைகளுக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் வழிவகை செய்யக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில், நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை இன்று அளித்துள்ளது. இது சம்பந்தமாக தேவையான சட்டதிருத்தங்களை ஏற்படுத்தக் கூறியுள்ள அந்த அமர்வு, …

மேலும் படிக்க

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாசகர்கள் அனைவருக்கும் ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மேலும் படிக்க

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பரப்பு குறைந்துள்ளது: ஆஸ்திரேலியன் பிரதமர் டோனி அப்பாட்

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தேடப்படுகின்ற இடத்தின் பரப்பளவு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக கடலுக்கடியில் இருந்து வந்த ஒலிச் சமிக்ஞைகள் விமானத்துடைய கருப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக, சீனாவில் வர்த்தக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற நேரத்தில் செய்தியாளர்களிடம் திரு.அப்பாட் கூறினார். இந்த விமானத்தின் பாகங்களை இப்போது மொத்தம் 47 ஆயிரம் சதுர …

மேலும் படிக்க

பாஜக வெளியிட்டது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை? ராகுல் காந்தி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பாஜக அப்படியே ஜெராக்ஸ் எடுத்து, அதில் சின்னத்தை மாற்றி, தங்கள் வாக்குறுதிகளாக வெளியிட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, காங்கிரஸ் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தலுக்கான பல வேலைகளை ஆரம்பித்துவிட்டது. தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னர், நாங்கள் ஏழை மக்கள், விவசாயிகள், …

மேலும் படிக்க