நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சிபிஐ இயக்குநர் ரஞ்ஜித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றச்சாட்டு குறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் மீதான புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும், சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து ரஞ்ஜித் சின்ஹாவை நீக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி