மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த பல மாதங்கள் தேவைப்படுமென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்பார்த்ததை விட வேகமாக வைரஸ் பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பின் துணை இயக்குநர் கெய்ஜி புகுடா எச்சரித்துள்ளார். இதனிடையே சியரோலியோனில், எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ மனை க்கு கொண்டு செல்லாமல் பாதுகாப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுமென அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கினி, நைஜீரியா, சியராலியோன், லைபீரியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த மார்ச் முதல் பரவி வரும் எபோலா வைரஸால், 1,427 பேர் பலியாகியுள்ளனர். 2,615 பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது