கங்கை நதியில் குளித்தால் கேன்சர் ஏற்பட வாய்ப்பு: ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல்

கங்கை நதியில் குளிப்பது புனிதமாகக் கருதப்பட்டு வரும் சூழ்நிலையில், ஒரு முறை கங்கை நதியில் குளித்தாலே புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறது ஹைதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம். அந்த ஆய்வு முடிவுகளின் படி, கங்கை நீரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பமேளா நடந்த போது கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ததில், குரோமியம் 6 என்ற நச்சு இருந்தது தெரிய வந்துள்ளது. குரோமியம் என்பது மிகவும் அத்தியாவசியமானது என்ற போதிலும் மிக மோசமான கழிவாகும். இருக்க வேண்டிய அளவை விட 50 சதவீதத்துக்கு மேல் அதிகமாக இருப்பதால் புற்றுநோய் உட்பட பல்வேறு உடல் நலக் கோளாறுகளை இது ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Check Also

உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ உலகின் அதிசயம்

உலகிலேயே முதல் முறையாக ரஷ்ய கணிப்பொறி விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை வரும் 2017ம் ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published.