பார்வையற்ற தமிழக மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை

சென்னை ஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் தேசிய அளவில் சாதனை படைத்தார். மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (யூபிஎஸ்சி) 2013-ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்காக தேர்வு எழுதியவர்களில் 1,122 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் தமிழக மாணவ, மாணவிகள் 109 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த 109 பேரில், பினோ ஜெபின் என்ற பார்வையற்ற மாணவியும் வெற்றி பெற்றுள்ளனர்.தேசிய அளவில் 343-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி பினோ ஜெபின் தற்போது ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார். பிறவியிலேயே பார்வையற்ற இவர் 2-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். பாடங்களை பிரெய்ல் முறையில் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

விஏஓ தேர்வு முடிவுகள் இன்னும் 3 வாரங்களில் வெளியாகும்

3 அல்லது 4 வாரங்களில் விஏஓ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். …

One comment

  1. subramanian.t

    2013-ம் ஆண்டு நடந்த ஐ ஏ எஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த தேர்ச்சி பெற்ற 109 பேரில், பினோ ஜெபின் என்ற பார்வையற்ற மாணவியும் வெற்றி பெற்றுள்ளார்.தேசிய அளவில் 343-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி பினோ ஜெபின் பல்வேறு பதவிகள் பெற இனிய வாழ்த்துக்கள்.அவரின் சாதனையை படத்துடன் பிரசுரித்த தங்களுக்கு நெல்லை மாவட்ட தமிழ் நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published.