குஜராத் கலவரம்: மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ள நிலையில்,

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக மோடி இருந்த போது முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரம் தொடர்பாக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க நாட்டுக்கு வெளியே நிகழும் சர்வதேச சட்ட மீறல் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க குடிமக்கள் தாக்கல் செய்யும் மனுக்களை விசாரிக்க அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.

அதனடிப்படையில், அமெரிக்க நீதித்துறை மையம் (ஏடிசி) என்ற மனித உரிமைகள் அமைப்பும், குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறி இருவரும் தொடர்ந்துள்ள வழக்கில், நியூயார்க் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தது.

குஜராத் கலவரத்தின் போது முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான மனித உரிமை மீறல், சட்டத்துக்கு புறம்பான வகையில் படுகொலை, மன ரீதியாவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றங்களில் மோடி ஈடுபட்டதாக தங்களது 28 பக்க மனுவில் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Check Also

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ வேண்டும்: சுஷ்மா சுவராஜ்

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர இடம் கிடைக்கும் வகையில் அந்த அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *