பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே. பழனிச்சாமி உயர்நிலைப் பள்ளி (தற்போது மேல்நிலைப்பள்ளி) யில் 1977-1978 ஆம் ஆண்டில், 11 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் ஒன்றினைந்து ” நவயுக சிற்பிகள்” என்ற அமைப்பினை தொடங்கி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்ப விழாவை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் “நவயுக சிற்பிகள்” ஆறாம் ஆண்டு விழா 10.11.19 ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 மணியளவில், மாபெரும் மருத்துவ முகாமுடன் இராயபுரம் அவ்வை கலைக்கழகத்தில் துவங்கியது. மாலை 6 மணி வரை நடைபெற்ற முகாமில் சென்னை நேஷனல் மருத்துவமனை சார்பில் ECG,RANDOM SUGAR BP HEIGHT,GENERAL CONSULTANT. DENTAL போன்ற பரிசோதனையினை 100 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் நண்பர்களின் துணைவியர்கள் குத்துவிளக்கேற்றி விழா துவங்கியது. விழா வரவேற்புரையை திரு. M.G.E. செல்லப்பழம் நிகழ்த்த தலைமையுரையை திரு. M. சம்பத் நிகழ்த்தினார். தொடர்ந்து மருத்துவ முகாமினை முன்னின்று நடத்த உறுதுணை புரிந்த திரைப்பட நடிகர் திரு. அஜய்ரத்தினம் கெளரவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சிறப்புரையினை நிகழ்த்திய திரைப்பட நடிகர் திரு. அஜய்ரத்தினம், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நமது பங்கு என்ன “என்பதை சுருக்கமாக விளக்கிக் கூறினார்.
தொடர்ந்து பேசிய திரு. சம்பத் அவர்கள் ” இந்த அமைப்பு உருவான விதம், இன்றைய சூழலில் தங்களது பங்கு ஆகியவற்றை எடுத்துரைத்தார். திரு. S.கபிலன் அவர்கள், தானும் ஒரு மாநகராட்சி பள்ளியில் படித்ததை நினைவு கூர்ந்தவர், இனி வரும் காலங்களில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் பேசுகையில், ” தங்களது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாகவும், லயன்ஸ் கிளப் ஆஃப் இராயபுரம் ஹெரிடேஜ் சார்பாகவும் மாநகராட்சி பள்ளியில் பொது மருத்துவமுகாம் நடத்தி தர இருப்பதாக தெரிவித்தார்.
திரு. செல்லபழம் பேசுகையில், இந்த அமைப்பினை ஆரம்பித்த போது தொடர்ந்து நடத்த மாட்டார்கள் என கேலி செய்தவர்களையும், பல சோதனைகளை தாண்டி நடத்தி வருகின்றோம். அது மட்டுமல்ல நம் வாரிசுகளும் நாம் செய்து வருகின்ற நலத்திட்ட உதவிகளை தொடரும் வண்ணம் செயல்படுவோம் என பலத்த கைத்தட்டலுக் கிடையே அறிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி பள்ளிகளில் படித்த 10 மற்றும் 12 வகுப்புகளில் (2018-19) முதல் மூன்று மாணவ/மாணவியர்கள் ஊக்கத் தொகை மற்றும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
நன்றியுரையினை திரு. N. செங்குட்டுவன் அவர்கள் நிகழ்த்த தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
படங்கள். வே. கந்தவேல் செய்தியாக்கம்
” ஜீனியஸ்” K. சங்கர்