PPFA திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சார்பாக தாகத்தினை போக்கிடும் வகையில் “நீர், மோர் பந்தல்”

கோடையின் தாக்கம் இப்பொழுதே உச்சம் அடைந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் தாகத்தினை போக்கிடும் வகையில் “நீர், மோர் பந்தல்” , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 21.04.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், மாவட்ட தலைவர் திரு. S. இதயத்துல்லா தலைமையில், மாவட்ட செயலாளர் திரு. A. சையது சுலைமான் முன்னிலையில்,

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும் , சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்-நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் தனது திருக்கரங்களால் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், போலீஸ பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. B. லட்சுமி நாராயணன்,

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில உதவி மக்கள் தொடர்பு அதிகாரியும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு. P.K. மோகனசுந்தரம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும். ‌ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. G. பூபால்,

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. பாலாஜி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் துணை தலைவர் திரு. ஜே. பாபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. பி.அசன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் திரு. ஐ. முகமது ஏஜாஸ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் திரு. எம். முகமது நவாஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ். நஸ்ருதீன், மாவட்ட துணை செயலாளர் திரு. ஜெ. சுதர்சன், மாவட்ட அமைப்பாளர் திரு Y. முகமது அனிபா, மாவட்ட துணை செயலாளர் திரு.பி.எஸ் சுரேஷ் மாவட்ட உறுப்பினர்கள் திரு. டி. குமரன், திரு. ஏ. மோகன்குமார், திரு. எஸ். அப்துல்ரகுமான், திரு. எஸ் ரபிக் சாஜித், திரு. கே. கருணாகரன், திரு. M.அப்சர், திரு. தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துக் கொள்ள, நன்றியுரையினை மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. ஜி. மணிகண்டன் நிகழ்த்தினர்.

மாவட்ட தவைவர் நம்மிடம் பேசும் போது, ” இந்த நீர், மோர் பந்தல் ” கோடை க்காலம் முடியும் வரை தொடர்ந்து அதாவது சுமார் நான்கு மாதங்கள் வரை நடத்த இருப்பதாகவும், இதற்காக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பிழினை வழங்க இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியினை பற்றி நமது மாநில தலைவர், ” பருவ காலநிலை மாற்றமானது சிறியோர் முதல் பெரியோர் வரை பாதிக்கும் வகையில் உச்சத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது. ஒரு வகையில் இதற்கு நாம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஏனெனில் இயற்கை வளத்தை அழித்தும், நீர்நிலைகளே காணாமல் போகும் அளவிற்கு ஆக்கிரமிப்பு, விவசாய நிலங்களையும் விட்டு வைக்காமல் விலை நிலங்களாக மாற்றியதன் விளைவால் இறைவன் தந்த இயற்கை வளத்திற்கு எதிராக செயல்பட்டதால் இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை. இனி நம் எதிர்காலம் எத்தகைய சூழலிலும் அழிவை நோக்கி செல்வதை தடுக்க வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் இனியாவது இருக்கின்ற இயற்கையை காத்திட முழு மூச்சுடன் இறங்கினால் நம் மூச்சு காற்று சுதந்திரமாக சுவாசிக்க முடியும்.

இன்றைய நிகழ்வினை பொறுத்தவரை பொதுமக்களின் நலனின் அக்கறை கொண்டு அவர்களின் தாகத்தை போக்கிடும் வண்ணம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பணி என்பது மிகவும் பாராட்டத்தக்கது. அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிப்பதில் கடமைப்பட்டிருக்கின்றேன் ” என தெரிவித்துள்ளார்.

Check Also

இனிய ரமலான் வாழ்த்துக்கள்

“வலிகள் தேய் பிறையாய் தேயட்டும்”! சந்தம் வளர் பிறையாய் மலரட்டும்! அன்பு, பாசம் நிறைந்த அனைத்து இஸ்லாமிய தோழர்கள் அவர்களது …