PPFA முன்னெடுக்கும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி .

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தவைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும் , சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசகயேஷன் மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார் , திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தலைவர் திரு. உதயகுமார் ஆகியோரது தலைமையில், சென்னை , அம்பத்தூர் சோழபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சந்தித்து அக்டோபர் 2023 இதழினை அளித்தனர்.

இந் நிகழ்வின் போது , பள்ளி மாணவ/வியர்களுக்காக ” போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கூட்டம் நடத்துவது பற்றி விவாதித்தனர். இப் பள்ளியினை பொறுத்தவரை சில வருடங்களுக்கு முன் சுமார் 150 மாணவ/வியர் , ஆறு ஆசிரியர்களை கொண்டு தொடங்கப்பட்டாலும், பள்ளியின் வளர்ச்சி என்பது இன்று 1000 மாணவ/வியர்கள் 20 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொண்டு தரமான கல்வியினை வழங்கி வருவது குறிப்பிடதக்கது.

இதற்கு எங்களது ஆசிரியர் பெருமக்களே காரணம் என பூரிப்புடன் சொல்கிறார் தலைமையுசிரியை. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இப் பள்ளி சிறப்பாக செயல்பட இதுவும் ஒர் காரணமே. இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு. விஜயகுமுர், இணை செயலாளர் திரு. பிரபாகரன், துணை செயலாளர் திரு. சரவணன், துணை செயலாளர் திரு. மணி, மாவட்ட உறுப்பினர்கள் திரு. சுரேஷ், திரு. ஜோஷ்வா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …