“கொடும்பாவி” ராஜபக்சேவின் இறுதி ஊர்வலம்…

இலங்கை அதிபர் ராஜபக்சே இறுதி ஊர்வலம் சென்னையில் நடந்தது! இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இறுதி ஊர்வலம் 7-ஆம் தேதி வியாழக் கிழமை காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள நெற்றிக்கண் வார இதழ் அலுவலகத்திலிருந்து துவங்கி, லயோலா கல்லூரி வரை தாரை தம்பட்டையுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி தலைமையில், தமிழ்நாடு பத்திரிகையாளார் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த இறுதி ஊர்வலத்திற்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துக் கொண்டனர். காலை 10.30 மணிக்கு ராஜபக்சே உடலுக்கு தீ வைக்கப்பட்டது. அதன் பின் அனைவரும் திரண்டு வந்து பால் ஊற்றினர்.
இதில் தோழர்கள் சகாயராஜ், ‘தேனி’ மாயவன், செங்கல்பட்டு மனோகரன், கழுகு கே.ராஜேந்திரன், மக்கள் ராஜபார்வை ஹரி கிருஷ்ணன், அனந்தராமன், ‘ஓடைப்பட்டி’ சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்துக் கொண்டு, ராஜபக்சே உடலுக்கு செருப்பு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராஜபக்சேவின்  காரியத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Check Also

இதனை தடுக்க வேண்டாமா?

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தினதோறும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *