புதுத்தாலி மாற்றுவது ஏன்?

சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேஷமானது. பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்வார்கள்.

அப்படி செய்தால் கணவன் நீண்ட நாள் வாழ்வார் என்பது நம்பிக்கை, கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வார்கள். நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு சப்த கன்னிகளை வழிபட்டு இந்த பூஜை நடத்துவார்கள்.

சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். ஆடி பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது.

இந்த ஆடி பெருக்கு அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். இதனால்தான் இந்த நாட்களில் இது போன்றெல்லாம் செய்ய வேண்டிய பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

Check Also

இறைவா காப்பாற்று..!

கீரிடம் தரித்த நச்சே! மானுடம் எரித்ததே உன் வீச்சே! அரசனென்ன! ஆண்டியென்ன! ஊரென்ன! உலகென்ன! விலையில்லா உயிர்களையே! கொத்துக் கொத்தாய் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *