ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தென் கொரியாவின் இன்சியான் நகரில் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற, ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றார்.
அரையிறுதியில் வென்றதன் மூலம் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியானது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் அவர் குவைத் வீரர் அப்துல்லாவை எதிர்கொண்டார். 3-2 என்ற செட் கணக்கில் அப்துல்லா, சவுரவை எளிதில் வீழ்த்தினார்.
இதனால், ஏற்கெனவே எதிர்பார்த்தபடி சவுரவ் கோஷலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி