பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தனது டூவிட்டர் இணையதளம் பக்கத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறான கருத்துக்களை குறிப்பிட்டு கடந்த 17–ந்தேதி மற்றும் 20–ந்தேதி கட்டுரைகள் வெளியிட்டார்.
இந்த 2 கட்டுரைகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ள சுப்ரமணியசாமி மீது ஜெயலலிதா சார்பில் 2 கிரிமினல் வழக்குகள் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளும் மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்குகளின் ஆவணங்களை பெறுவதற்காக வருகிற அக்டோபர் 30ந் தேதி சுப்ரமணியசாமி நேரில் ஆஜராகவேண்டும் என்று கூறி அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.