கடந்த 1993 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட 214 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 1993 – 2011 இடையே வழங்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த உரிமங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இவற்றை ரத்து செய்வது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 1993, 2011 இடையே வழங்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமத்தை ரத்து செய்வது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம். உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவை மத்திய அரசு ஏற்கத் தயார் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்த 218 சுரங்க உரிமங்களில் 46 உரிமங்களை அனுமதிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கலாம். இந்த 46-ல் 40 சுரங்கங்கள் தற்போது நிலக்கரி உற்பத்தி செய்து வருகின்றன.
ஆறு சுரங்கங்கள் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது. உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள 6 சுரங்கங்கள் குறித்த முதல் தகவல் அறிக்கை விவரங்களையும் மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், 218 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 214 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்வதாகவும், 4 நிலக்கரிச் சுரங்கங்களின் உரிமத்தை மட்டும் ரத்து செய்யவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
