Tag Archives: கொரோனா

கொரோனாவுக்கு முதல் ஊடகவியாளர் பலி….

ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் திரு. வேல்முருகன் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென உயிரழிந்த சம்பவம் ஒட்டு மொத்த பத்திரிகை, ஊடகவியாளர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் களப்பணியில் உள்ள‌ பத்திரிகையாளர்கள், ஊடகவியாளர்கள் மிகவும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். ஏனெனில் நம்மை நம்பி நம் …

மேலும் படிக்க

காவல்துறைக்கு பாதுகாப்பு வசதிகள் அளிக்க வேண்டும்… உயர்நீதிமன்றம் உத்தரவு…

காவல்துறையினருக்கு முழு உடல் கவசம், கிருமி நாசினி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் பதில் அளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் போலீஸ் மற்றும் சிறை துறையில் பாதிப்பு அதிகரித்தே வருகிறது. இவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான விரிவான அறிக்கையினை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது போன்ற மற்றொரு வழக்கில், கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முகத்தினை …

மேலும் படிக்க

மணலி, மாத்தூரில் மக்கள் நலனுக்காக கபசுரக் குடிநீர்..

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, மணலி, மாத்தூர் பகுதி மக்கள் நலனுக்காக, கொரோனா எதிர்ப்பு சக்தியாக விளங்கிடும் “கபசுரக்குடிநீர்” (கசாயம்) மாத்தூர், எம்.எம்.டி.ஏ., 2 வது பிரதான சாலை E.B. அலுவலகம் அருகில் , 24.06.2020, புதன்கிழமை காலை 8 மணியளவில், …

மேலும் படிக்க

கொரோனா ஊரட‌ங்கில் காவலர்களின் உன்னத பணி…..

தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகின்ற சூழலில் சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் உலா வந்துக் கொண்டிருக்க, இவர்களது நலனில் அக்கறை கொண்ட நமது அரசு, முழு ஊரடங்கு கொண்டு வரும் பட்சத்தில் நோயின் தாக்கத்தை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்துதான் கடந்த …

மேலும் படிக்க

ஊரடங்கில் விதிகளை மீறாமல் நடக்க காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை…

சென்னை H6 ஆர். கே. நகர் காவல் நிலையம் சார்பாக, காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட கொருக்குப் பேட்டையில், சென்னையில் இன்று முதல் 12 நாட்கள் அமுல்படுத்தியுள்ள ஊரடங்கில் மக்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை பகுதி வாழ் மக்களுக்கு எடுத்துரைத்தனர் கொருக்குப்பேட்டை வேலன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தினார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக …

மேலும் படிக்க

உயிர் காக்க வெட்டி வேர் முக கவசம் அறிமுகம்…

இன்றைய காலகட்டத்தில் நமக்கு உயிர் கவசமாக முககவசம் அவசியமாகிவிட்டது. ‌நாம் அறிமுகப்படுத்தியுள்ள முக கவசமானது வெட்டி வேரை உள்ளடக்கி, நாம் சுவாசிக்கின்ற கெட்ட காற்றினை சுத்திகரித்து நல்ல காற்றினை வழங்கிடும். இது முழுக்க முழுக்க இயற்கை மூலிகையான வெட்டிவேரால் “எலைட் நிறுவனம்” தயாரிப்பில் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை நம் பகுதி வாழ் மக்களுக்காக அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கின்றோம். அந்த வகையில் போலீஸ் பப்ளிக் பிரண்டஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், …

மேலும் படிக்க

இயற்கை தந்த வரம், வெட்டிவேர் முக கவசம்!

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் திரு பொன்ராஜ் அவர்கள் அறிமுகப்படுத்திய ELITE நிறுவனம் ” வெட்டிவேர் முக கவசம்” எனும் புதிய முக கவசத்தை தயாரித்துள்ளது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி வட …

மேலும் படிக்க

சென்னையிலிருந்து சிவகாசி நாகலாபுரத்திற்கு வந்த இளைஞர்களுக்கு கொரோனா தொற்று

சென்னையிலிருந்து சிவகாசி நாகலாபுரத்திற்கு வந்த இரண்டு இளைஞர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகமில்லாத நகராக இருந்த சிவகாசியில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது பற்றி மக்கள் கூறுகையில், ஊரடங்கால் அரசு எடுத்து வரும் நடவடிக்கையில் நாங்கள் முழு ஒத்துழைப்பினை தந்து வந்தாலும், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்துள்ளனர். ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:ஜெயகுமார், சிவகாசி.

மேலும் படிக்க

கொரோனா பாதித்தவர்களை கைவிடுகிறதா தமிழக அரசு ? தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் DSR சுபாஷ் கேள்வி?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு வருவது போன்ற ச‌ந்தேக‌ம் எழுவதாக, மக்கள் நலனில் உள்ள அக்கறையில் தமிழக அரசை சாடியுள்ளார் அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்க செயலாளர் மறறும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத் தலைவர் திரு. DSR. சுபாஷ் அவர்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கையில், ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த சுகாதாரத்துறை தற்போது கடும் விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது எனவும் மாவட்ட வாரியாக தினமும் …

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரட‌ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா பரவாமல் தடுக்க அமல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைகினங்க O.B.C துறை சார்பாக O.B.C மாநிலதலைவர் T.A.நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் …

மேலும் படிக்க