தாம்பரம், சோமங்கலம் , புதுநல்லூரை சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. மோசஸ், கஞ்சா விற்பனை பற்றிய செய்தியை சேகரித்து வெளியிட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் நேற்றிரவு அவர் வீட்டிற்கு வந்து தந்திரமாக வெளியே வரவழைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர், இதனால் நிலைகுலைந்த இவரது, அலறலை கேட்டு அவரது தந்தை வெளியே ஓடி வந்தார். இதனால் அந்த மர்ம கும்பல் தப்பியோடியது. பலத்த காயத்துடன் …
மேலும் படிக்கஒரிசாவில் தமிழ் பொறியாளர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை
ஒடிசாவில் பணியாற்றி வந்த மதுரையைச் சேர்ந்த உதவி பொறியாளர் ஒருவர் இரும்புக்கம்பியால் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சார்ந்த டிரைவர் ஒருவரின் மகன் கணேஷ் குமார். இவர் ஓரிசா மாநிலம் ரூர்கோலாவில் உள்ள இரும்பு உற்பத்தி ஆலையில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஒப்பந்த பணியாளர் ஒருவரால் கணேஷ் குமார் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து …
மேலும் படிக்கஆஃப்கானிஸ்தானில் கைதிகளை விடுதலை செய்த தலிபான் தீவிரவாதிகள்
ஆஃப்கானிஸ்தானில் காஸ்னி சிறையில் காவலர்களைக் கொன்றுவிட்டு சிறையில் இருந்த நூற்றுக்கணக்கான கைதிகளை ராணுவ உடையில் வந்த தலிபான் தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளனர். ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி மாகாணத்தின் முக்கியச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். சிறைக்காவலில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகள், அங்கு அடைக்கப்பட்டிருந்த 352 கைதிகளை தப்பவைத்தனர். இந்த சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகள் …
மேலும் படிக்ககல்புர்கி கொலை: சந்தேகிக்கும் இருவரின் உருவ படங்கள் வெளியீடு
கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் உருவ படங்களை கர்நாடக போலீசார் வெளியிட்டுள்ளனர். கன்னட எழுத்தாளரான கல்புர்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக மாநிலம் தர்வாத்தில், மர்மநபர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அம்மாநில சிபிசிஐடி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் உருவப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் சிசிடிவியில் …
மேலும் படிக்கஈராக்கில் பழிக்குப் பழியாக 4 பேரை உயிருடன் எரித்துக் கொன்றனர் ஐஎஸ் தீவிரவாதிகள்
ஈராக்கில் 4 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அதன் வீடியோ காட்சியை ஐஎஸ் தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சியில் 4 பேர் இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், எரித்துக் கொல்லப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஈராக் அரசு படையினர் தங்கள் அமைப்பை சேர்ந்த 4 பேரை உயிருடன் எரித்து கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கவே, தற்போது 4 பேரை எரித்து கொன்றதாகவும் ஐஎஸ் தீவிரவாதிகள் …
மேலும் படிக்கஎம்.எம்.கல்பர்கி கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடகாவில் உள்ள தர்வாத்தில் உள்ள எம்.எம்.கல்பர்கியின் இல்லத்தில் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது கொலைக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி, …
மேலும் படிக்கநாட்டில் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: டி.எஸ்.ஆர். சுபாஷ்
கர்நாடகா மாநிலப் புரட்சி எழுத்தாளர் தொழர் எம்.எம்.கல்புர்கி மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகா மாநிலப் புரட்சி எழுத்தாளர் தொழர் எம்.எம்.கல்புர்கி மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது கருத்து சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டு உள்ளதையே உணர்ந்துகிறது. தந்தை பெரியார் வழியில் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து தனது எழுத்துக்கள் மூலம் பல வகையான புரட்சிகள் செய்தவர் …
மேலும் படிக்கமூத்த கன்னட எழுத்தாளர், முன்னாள் துணை வேந்தர் கல்புர்கி சுட்டுக் கொலை – இந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் விசாரணை
சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இந்துத்துவா அடிப்படைவாதி களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எழுத்தாளரும் முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம். கல்புர்கி கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள யரகல் கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தார். கன்னடத்தில் …
மேலும் படிக்கஅமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலையின்போது நிருபர், ஒளிப்பதிவாளர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது புகுந்த மர்ம நபர் அங்கிருந்த நிருபர், ஒளிப்பதிவாளரை சுட்டுக் கொன்றார். இந்தப் படுகொலைக் காட்சி நேரலையில் ஒளிபரப்பாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் துரத்தியதை அடுத்து அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார். அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரவோனாகேவில் டபிள்யுடிபிஜே7 (WDBJ7 )என்ற செய்தி சானல் இயங்குகிறது. இங்கு பணியாற்றி வந்த ஆலிசன் பார்க்கர்(24), ஒளிப்பதிவாளர் …
மேலும் படிக்கடெல்லி தேசிய பூங்காவில் இளைஞரை வெள்ளைப் புலி அடித்துக் கொன்றது
டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் தவறி புலியின் கூண்டில் விழுந்த இளைஞர் ஒருவரை வெள்ளை புலி அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து நேரில் கண்ட ஒருவர் கூறும்போது, “உயிரியல் பூங்காவில் சுற்றுலாவுக்காக வந்த இளைஞர் ஒருவர், 12.30 மணி அளவில் அங்கு உள்ள அரிய வகை வெள்ளைப் புலி இருக்கும் பகுதிக்கு தனது நண்பருடன் வந்திருந்தார். தடுப்புகளுக்குள் …
மேலும் படிக்க