மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும், இடஒதுக்கீடு அளிப்பது பற்றி மூன்று மாதங்களில் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (OBC) வழங்கப்பட வேண்டிய 50 …
மேலும் படிக்கதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவை குறைத்து கணக்கிடப்பட்டது எப்படி? – தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி செலவுத் தொகை எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது என விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அந்த இடங்களுக்கான கட்டணத் தொகை, குழந்தைகளுக்கான கல்விச் …
மேலும் படிக்ககாவல்துறைக்கு பாதுகாப்பு வசதிகள் அளிக்க வேண்டும்… உயர்நீதிமன்றம் உத்தரவு…
காவல்துறையினருக்கு முழு உடல் கவசம், கிருமி நாசினி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் பதில் அளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் போலீஸ் மற்றும் சிறை துறையில் பாதிப்பு அதிகரித்தே வருகிறது. இவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான விரிவான அறிக்கையினை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது போன்ற மற்றொரு வழக்கில், கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு முகத்தினை …
மேலும் படிக்கஇளங்கோவனுக்கு ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த முடியாது : உயர்நீதிமன்றம்
இளங்கோவனின் முன் ஜாமினுக்கான நிபந்தனைகளை தளர்த்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்ற என்ற இளங்கோவன் தரப்பு வேண்டுகோளை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். காவல்துறை இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வரும் போது இளங்கோவனுடன் 2 …
மேலும் படிக்க‘அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்’: அலகாபாத் உயர்நீதிமன்றம்
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நீதித்துறையின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க சலுகைகள் பெறுவோர் அனைவருமே மாநிலக் கல்வித் துறையால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்தும் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கான தகுதிகளை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட விவரங்களையும் விசாரித்து வந்த …
மேலும் படிக்ககனிமவள முறைகேடுகளில் தமிழக அரசு சிலரை காப்பாற்ற முயல்கிறதா?
தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்திருப்பதன் மூலம் நீதிமன்ற உத்தரவை அவமதித்திருப்பதாக சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. …
மேலும் படிக்கஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 6க்கு ஒத்திவைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 6ம் தேதி வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பெங்களுரு உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், இன்று இந்த மனு தொடர்பில் விடுமுறைக்கால சிறப்பு அமர்வின் நீதிபதி ரத்னகலா …
மேலும் படிக்ககிரானைட், தாது மணல் கொள்ளை குறித்து சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு- சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், கிரானைட், தாது மணல் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்படுகிறது, மதுரையை போல் மற்ற மாவட்டங்களிலும் கிரானைட் மற்றும் தாது மணல் …
மேலும் படிக்ககந்து வட்டி வசூலித்தால் குண்டர் சட்டம்?
பொதுமக்களிடம் கந்து வட்டி வசூலிப்போரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்து வட்டி தடுப்புச் சட்டம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் விரிவான பிரச்சாரம் செய்யும்படி அரசுக்கு உத்தர விட்டனர். கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், இந்த விவகாரத்தில் கந்து வட்டி …
மேலும் படிக்கசன் குழுமம் கேபிள் டி.வி நடத்த அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சன் குழுமம், சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான உரிமம் வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. இதற்கான தகவலை கடந்த 20ஆம் தேதி வெளியிட்டபோது, அன்றிலிருந்து 15 நாட்களுக்குள் தன் சேவைகளை நிறுத்திக் கொள்ளும்படி சன் குழுமத்துக்கு இந்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கல் கேபிள்ஸ் பிரைவேட் லிமிடேட் (Kal …
மேலும் படிக்க