இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனுவிற்கும், சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளரான பெங்களூருவைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயான் இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் …
மேலும் படிக்க22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது
1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. கொழும்பு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று 386 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 268 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, …
மேலும் படிக்கஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?
புதிய பயிற்சியாளர் குறித்த முடிவை சச்சின், லஷ்மன், கங்குலி ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு எடுக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்த முடிவு செப்டம்பர் மாதத்தில் உறுதியாக எடுக்கப்பட்டு விடும் என்று அனுராக் தாக்கூர் உறுதி தெரிவித்தார். அதாவது தென் ஆப்பிரிக்க அணியின் நீண்ட தொடருக்கு முன்பாக பயிற்சியாளர் குறித்த முடிவெடுக்கப்படும் என்றார் அனுராக் தாக்கூர். இது குறித்து …
மேலும் படிக்கஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணி முதலிடம் பிடித்தது
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. இந்திய அணிக்கு முதலிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் முடிவில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இலங்கை–இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர வரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தொடருக்கு முன்பு …
மேலும் படிக்கஉலக சாதனை: இமாலய சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா
இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 2-வது முறையாக இரட்டைச் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சேவாக் வசம் இருந்த உலக சாதனையையும் முறியடித்துள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய அவர், தனது …
மேலும் படிக்கஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் பீல்டிங் அமைப்பினால் சர்ச்சை
அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் அமைத்த களவியூகம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய சில களவியூகங்களை ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் அமைத்தார். இன்று ஒரு சமயத்தில் மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பவுலருக்கு நேராக நிற்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், பேட்ஸ்மென்களுக்கு பவுலரின் கை …
மேலும் படிக்கமேற்கு இந்திய தீவுகளுடன் இனிவரும் ஆட்டங்களை நிறுத்த பிசிசிஐ முடிவு
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இந்தியா எதிர்காலத்தில் விளையாடவிருந்த இருதரப்பு கிரிக்கெட் தொடர் போட்டிகள் அனைத்தையும் இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தீர்மானித்துள்ளது. இந்தியாவில் விளையாடிவந்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தொடரை பாதியிலேயே ரத்து செய்துவிட்டது சம்பந்தமாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பிசிசிஐ செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானித்துள்ளனர். பார்வையாளர் அரங்க டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், மூன்று …
மேலும் படிக்கஎம்.எஸ்.தோணி படத்தின் பர்ஸ்ட் லுக்
எம்.எஸ்.டோணி – தி அன் டோல்டு ஸ்டோரி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. டோணியின் மனைவி சாக்ஷி இதனை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். தோணி படம் போஸ்டர் வெளியானது முதல் ரசிகர்கள் பாராட்டினை அள்ளி குவித்து வருகின்றனர். தோணியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்று “எம்.எஸ்.டோணி” என்ற பெயரில் பாலிவுட்டில் தயாரிக்கப்பட உள்ளது. பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த திரைப்படத்தில் சுஹாந்த் சிங் ராஜ்புத், தோணி …
மேலும் படிக்கஒருநாள் போட்டி தொடருக்கு ரவிசாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக நியமனம்
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் இயக்குனராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித்தொடருக்கு பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டிவிட்டு இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரியை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஜோடேவிஸ், பீல்டிங் பயிற்சியாளர் டிரெவர் பென்னி ஆகியோருக்கு ஓய்வு அளிப்பதாககூறி நீக்கிய பிசிசிஐ, முன்னாள் வீரர்கள் …
மேலும் படிக்கஐசிசி தலைவரானார் சீனிவாசன்
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டில், ஐசிசி கவுன்சிலின் 52 உறுப்பினர்கள் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஐசிசி தலைவராக உறுதிசெய்யப்பட்டதை மிகுந்த கவுரமாகக் கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டின் வலுவான …
மேலும் படிக்க